Mittwoch, August 11, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - சுந்தரவடிவேல்




அப்போது நான் கல்லூரியில் இளங்கலைப் படிப்பிலிருந்தேன். தேசிய மாணவர் படை முகாமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு இந்திய இராணுவத்திலிருக்கும் வீரர்களால் பல்விதமான மைதானப் பயிற்சிகளோடு வகுப்பறைகளிலும் பாடங்கள் நடத்தப்படும்.

இந்த வகுப்புக்கு ஒரு நாள் ஒரு அவில்தார் வந்தார். கேரளத்துக்காரர். இவர் அன்றைக்குச் சொல்லித்தந்திருக்க வேண்டியது என்னவென்று எனக்கு நினைப்பில்லை. ஆனால் அப்போதுதான் இலங்கையிலிருந்து திரும்பி வந்திருந்தாராம். இந்திய அமைதிப் படையிலே இருந்தாராம். இவர், நம் இராணுவம் எதற்காகப் போனது என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையைச் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ எங்களுக்குச் சொல்லவில்லை. மாறாக அவர் சொன்னதெல்லாம் தான் எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றார் என்பதைக் கதையாகச் சொன்னார்.

இப்போது அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்ததற்காக வெட்கப் படுகிறேன். ஆனால் அன்றைக்கு எனக்கோ என்னையொத்த மாணவர் படையினருக்கோ அது ஒரு அவில்தாரின் வெற்றி பெற்ற காமக் கதை. வன்புணர்ச்சியாக இல்லாத போதும் இது ஒரு கீழ்த்தரமான பாலியல் ஒடுக்குமுறை. இது மிக மிக நாகரீகமான ஒரு உதாரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள். இவை இரண்டும் ஈழத்தில் ஒரே ஒரு இடத்தில், வல்வெட்டித்துறையில், இரண்டு நாட்களில் இந்தியப் படையினரால் நிகழ்த்தப்பட்ட வன் செயல்கள். இது குஜராத் மதவெறிக் குண்டர்களின் கலவரத்திலிருந்தோ அல்லது சிங்களக் காடையரின் இனவெறியிலிருந்தோ சற்றும் குறையாமலிருப்பதை உணர்வீர்கள். இதை ஒரு இராணுவம் நிகழ்த்தியிருப்பது அசிங்கம். அதைவிட அசிங்கம் இது நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பது. ஊரடங்கை அமல்படுத்திவிட்டு 63 பொதுமக்களை வெட்டியும் எரித்தும் படுக்க வைத்து முதுகிலே சுட்டும், பாலியல் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டும், நூலகங்களைக் கொளுத்தியும் ஒரு இராணுவம் "அமைதிகாக்கும் பணி" புரிந்ததாம். இது ஒரே ஒரு உதாரணந்தான். இந்தியப் படையின் நடவடிக்கைகளை ஊர் ஊராக ஒவ்வொருவரும் பதிய ஆரம்பித்தார்களென்றால், வங்காலைக் கிராமத்தில் சன்னல், கதவிடுக்குகள் வழியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது போகிற போக்கில் தெருக்காரக் குடியானவனைக் குத்திக் குடலையுருவிப் போட்டுவிட்டுப் போன வீரக் கதைகளும் இன்னும் எத்தனையோவெல்லாமோ வந்து சேரும்.

இத்தகைய நிகழ்வுகளை, பாதிப்புகளிலிருந்து எழுந்த கதைகளை, கட்டுரைகளை இப்போது சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான தகவலையும் கீழே தந்திருக்கிறேன். இலங்கை இனப் போராட்டம் என்றவுடனேயே மாலை போட்டு ராஜீவ்காந்தி போட்டோவைத் தூக்கிக் கொண்டு வந்து ஊதுபத்தியைக் கொளுத்தி வாழைப்பழத்தின் மேல் குத்தி வைத்து விட்டுப் போராட்டத்தை இழிவு படுத்தும் நம் போக்கு மாற வேண்டும். நமது இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் நிகழ்த்திய அசிங்கங்கள் அம்பலப் படுத்தப் பட வேண்டும்.

1. ஈழநாதனின் பதிவு
2. கரிகாலனின் பதிவு (நான் மேலே இட்டிருக்கும் படத்தை இவரது பதிவிலிருந்தே எடுத்தேன்).
3. கட்டுரைகள் மற்றும் படைப்புகளைக் கேட்டிருக்கும் "ஒல்காரின்" வேண்டுகோள் (சந்திரவதனா வலைப்பூ உரையாடற்பெட்டியில் இட்டிருந்தார்).



#######################################
COMMENTS

வங்க தேச விடுதலைப் போரின் போதே இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் வெளியாயின.

உள்நாட்டுக் கலவரங்களின் போது பணியமர்த்தப்படும் ராணுவம் தம் மக்களிடமே மிருகத்தனமாக நடந்து கொள்வதைத்தான் கண்டு வந்திருக்கிறோம்.

ராணுவத்திற்கும் - ஏன் காவல் துறைக்கும் கூட - மனித நாகரிகத்தையும் மனிதப் பண்புகளையும் பயிற்றுவிப்பது முதலாவது தேவை. அவர்கள் அதில் தேறிய பிறகு ஆயுத பயிற்சி மேற்கொண்டால் போதும் என்ற நிலை வர வேண்டும்.

வெளித்தோற்றத்தில் தெரியும் ஒழுங்கும் கட்டுப்பாடும், வலிமையற்ற அப்பாவி மக்களைக் கண்டதும் காணாமல் போகிறது என்றால், அது எவ்வளவு போலியானது என்று புலனாகிறது. கட்டுப்பாடும் ஒழுங்கும் உண்மையானதாக, உள்ளார்ந்ததாக அமைய வேண்டும். தவறு செய்வதைப் பற்றிய அச்சமும் தவறுகளுக்குப் பொறுப்பாவோம் என்ற பயமும் அவர்களுக்கு வேண்டும்.

நாம் ஒன்றும் சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. நமது தேசபக்தியை புலப் படுத்த நமது ராணுவத்தின் தவறுகளை மூடி மறைக்க வேண்டியதில்லை.



-------------------------------------------------
regardless to this, see this
http://www.sundayobserver.lk/2004/08/08/fea31.html
-/பெயரிலி | Email | 08.08.04 - 10:51 am | #

--------------------------------------------------------------------------------

தற்போதைய திருப்பணி மணிப்பூரில்.
ntmani | 08.08.04 - 1:22 pm | #

--------------------------------------------------------------------------------

நெஞ்சு பொர்றுக்குத்ல்லையே....
paari | Email | 08.08.04 - 1:57 pm | #

--------------------------------------------------------------------------------

நன்றி சுந்தரவடிவேல்

இப்பதிவை ஒல்காரின் தமிழ்வொயிஸ் முகவரிக்கு அனுப்பி விடுவீர்களா?
http://www.selvakumaran.de/padam/OlK-Notice.pdf
முடிந்தால் பாமினி எழுத்துருவுக்கு மாற்றி விட்டு அனுப்புங்கள்.

நட்புடன்
சந்திரவதனா
Chandravathanaa | Email | Homepage | 08.10.04 - 3:23 am | #

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - வந்தியத்தேவன்


எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள்

ஈழத்தில் இந்திய ராணுவக்காலம்

அன்பார்ந்த தோழியர்க்கு,

வதனா அவர்களின் பதிவினைப் படித்தேன். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் யாவர்க்கும் பொது. அதன் அடிப்படையில் அவரது படைப்பினை வரவேற்கின்றேன். கூடவே வெளியான கவிதைதான் வேதனையை வெளிப்படுத்துகிறது.

நாட்களின் நகர்வில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு

தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் இயலவில்லை
இன்னும்

இக்கவிதையைப் படித்தபின் என்னுள் பல கேள்விகள்.

எங்கேயோ இருக்கும் நார்வே, இலங்கை தேசத்தில் அமைதி ஏற்படுத்த தீவிரமாய் செயல்படுகிறது. முதன் முறை கையைச் சுட்டுக் கொண்டாலும், இந்தியா அமைதிப் பேச்சுகளில் ஈடுபட வாய்ப்பு இருக்கும் சமயத்தில் இக்கவிதை எனது பலவீனமான பகுதியில் பலமாய் இடித்தது. காயங்கள் ஆறும் தருணத்தில், சிரங்கு சொறிந்த க(ரம்)விதை இது.

ஆமாம். வதனா, உங்களுக்கு இக்கவிதையில் முழு உடன்பாடா? இதுதான் அனைத்து ஈழத்தமிழர்களின் எண்ணவோட்டமா? அப்படியென்றால் உங்கள் தேசத்தில் யார் நெருப்பள்ளிக் கொட்டியது? இந்திய ராணுவமா? உங்கள் வானத்தின் மீது இருளள்ளிப் பூசியது யார்? இந்தியாவா? விடுதலைப் புலிகள் என்றால் அவரும் ஈழத் தமிழரா? இல்லை அவர்கள் வேறா?

இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?

நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல, எக்கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு. அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்? தனது 1,200 மகன்களை காவு கொடுத்து 3,000 மகன்களை காயப்படுத்தி இந்தியத் தாய் கண்ட பலன் என்ன? தனது மண்ணிலேயே ஒரு தலைவனை/தனையனை இரத்த சகதியில் அமிழ வைத்தென்ன புண்ணியம்? தடா, பொடா இன்னும் எத்தனை "டா"க்கள் காத்துள்ளன? என்னாலும் நடந்தவற்றை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை, இன்னும்.

உடனே கற்பழிப்பு, கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்துகிறேனென்று எண்ணாதீர். அது நான் சொல்ல வந்த கருத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

நியாயமான பின்னூட்டங்களுக்கும், எதிர் பதிப்புகளுக்கும் கண்டிப்பாய் என் பக்க நியாயத்தை நிலை நிறுத்துவேன்.

வந்தியத்தேவன்.

#########################################

comments

Do you seriously think that India went to Sri lanka with the sole purpose of helping Tamils? You are either naive or in refusal to to accept the truth. Even Arulmozhi varman (Raja Raja Chozhan I) went to ilangkai with the notion of domination

"GEOPOLITICS" is the key word.

Did you live in Sri lanka when Indian Army was there. If not, as a person who lived there I have more knowledge and experience than you to totally refute, "அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டு, அமைதி காக்கச் சென்று அடிபட்டு, அவமானப்பட்டு திரும்பவில்லையா இந்திய ராணுவம்? போர் புரியவா அவர்கள் வந்தார்கள்?" Stop kidding yourself.
-/peyarili. Email 08.10.04 - 1:32 pm #

-------------------------------------------------------

vanthiyathevan,

i know a lot of common innocent ppl. men, women and children who suffered at the hands of IPKF. so callled 'peace keeping force'.

I am glad for once that ppl r coming forward to share their sorrows.

Even the U.S. is investigating the atrocities committed by its soldiers in iraq. do, u think such a thing will happen in india? will india ever investigate IPKF?

i could write more. but one has to have an open mind and be recptive. something seriously lacking in thamiz iNaiyam.
Mathy Kandasamy Homepage 08.10.04 - 2:53 pm #


ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் - ஒல்கார்

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்

Mittwoch, Juli 07, 2004

Comments: ஈழத்துப் பூக்கள்

EzhathupUkkaLai Nugarthen. :)
Posted by karthikramas at July 6, 2004 12:16 AM
*********************************************************

நன்றி ஈழவன்.
இளமைத் துடிப்பா. அதை எங்க பார்த்தீங்கள்? :) பதிவுகளில் எனது கவிதையா? முகவரி தருவீர்களா? இளைஞர்களுக்கான தனித்தளமா? (முழிக்கிற மாதிரி படம் எங்க எடுக்கலாம்?). நான் நினைக்கிறன் coming soon ஐ பார்த்திட்டு குழமு்பிட்டீங்குள் போல. வெகு விரைவில் "coming soon" எதற்கு என்று சொல்கிறேன். :)
Posted by இளைஞன் at July 6, 2004 07:00 AM
*********************************************************

என்ன இளைஞன் இப்படிச் சொல்லிவிட்டீர்கள் இளைஞன் என்பது உன்மைப்பெயர் இல்லை அதைச் சொல்லாமல் மறைத்துவிட்டேன் அதுபற்றி ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தால் இப்படி மாட்டிவிட்டுவிட்டீர்களே.பதிவுகளில் உங்கள் கவிதை பார்த்த ஞாபகத்தில் சொல்லிவிட்டேன் வார்ப்பு சரிதானே?
Posted by Eelanathan at July 6, 2004 07:48 AM
*********************************************************

ஆகா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கள்! மறைத்தீர்களா? மறந்தீர்களா? மறந்துபோனதால் இப்ப வந்து அதனை ஞாபகப்படுத்தி எழுதிவிட்டுப் போட்டீங்கள். சரி சரி... நடத்துங்கோ...
Posted by இளைஞன் at July 6, 2004 08:58 AM
*********************************************************

வணக்கம்
நன்றி ஈழவன் காதல்புத்தகத்திற்கு ஓர் அறிமுகம் செய்துவைத்தமைக்கு இந்தவயதில் இத்தகைய இலக்கிய ஆர்வம் உங்கள் வசம் இருப்பதையெண்ணி நான் வியப்படைகின்றேன். அதேவேளை பொறமைப்படவும் செய்துகொள்கின்றேன்
தொடருங்கள் இன்னும் இன்னும் புதுமைகளை இலக்கியத்துறைக்குள் எதிர்பார்த்துக்கொள்கின்றேன்
நன்றி
Posted by paranee at July 6, 2004 12:19 PM
*********************************************************

Munavin peyar Selvakumaran aakum. Chandravathnaavin kaNavar enpathum
kurippidaththakkathu. Kannil theriyuthu vaanam thokupilum ivarathu cartoons sila idampetrullana.
Eelamurasu paththirikaiyilum ivar kaivaNNaththai
kaaNalaam.
Posted by R.Pathmanaba Iyer at July 6, 2004 06:44 PM
*********************************************************

நன்றி காதற் கவிஞரே(பரணி)
ஐயா தங்கள் வரவு நல்வரவாகுக ஐயோ இந்த விசயம் எனக்குத் தெரியாமல் போச்சே.சந்திரவதனா அக்காவின் குடும்பமே கலைக்குடும்பமா?
Posted by Eelanathan at July 6, 2004 09:29 PM
*********************************************************

vanakam
inruthan nanum arinthu konden, chandiravathana akkavin kanavarthan muna enru, thakavalirku nanri nanpare, akkavudan neraijathadavai kathaithirunthum ithaipati arijamal vidu viden,
valthukal Mr.Muna., inum inum ethirparkinrom
oru kalaikudumpam nanparkalai kedaikapetathu naam saitha paikijam
Posted by paranee at July 7, 2004 01:13 AM
*********************************************************

Vanakam Eelavan
kudilai maranthu velaipaluvil irunthu viden, thatpothu mendum athanul pukunthu viden,
nani nenga sudi kadija meel pathivuku
Posted by paranee at July 7, 2004 01:15 AM
*********************************************************

Dienstag, Juli 06, 2004

ஈழத்துப் பூக்கள் - Eelanathan

இணையத்தமிழின் வளர்ச்சிக்கு ஈழத்தமிழர்களும் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது அது எந்தளவுக்கு உண்மை என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் இந்த யோசனை தோன்றியது.வலைப்பதிவுகளையே ஆராய்ந்து பார்க்கலாம் எத்தனை ஈழத்தமிழர்கள் இதில் பங்களிப்புச் செய்கிறார்கள் என ஒரு கணக்கெடுப்பு நடத்திவிடலாம் என யோசித்தேன் இது எந்தவிதத்திலும் ஈழத்தமிழர்களை மற்றவர்களிடமிருந்து பாகுபடுத்த அல்ல சும்மா ஒரு கணக்கெடுப்பு அவ்வளவே

வலைப்பதிவாளர் பட்டியல் வரிசையில் ஆரம்பிக்கிறேன்

********************************************************

அஜீவன்
எச்சில் போர்வை நிழல் யுத்தம் போன்ற குறும் படங்களின் இயக்குனர்.அண்மையில் நியூஜெர்சி சிந்தனை வட்டத்தினரால் நடத்தப்பட்ட குறும்பட விழாவில் இவரது படமும் இடம்பெற்றது.குறும்படங்கள் பற்றிய தொழில்நுட்ப விளக்கங்களையும்.பெண்ணியம் சம்பந்தப்பட்ட பார்வைகளையும் தனது பதிவில் தருகிறார்.அண்மைய பதிவு படங்களை மெருகேற்றல் சம்பந்தமான மென்பொருட்களுக்கான சுட்டியாக அமைகின்றது.
*********************************************************

சந்திரலேகா
பெண்ணியவாதியாக மட்டுமல்ல தமிழரின் கலை பண்பாட்டு ரீதியான ஆய்வுக்கட்டுரைகளுக்கும் பேர் பெற்றவர்.திண்ணை மின்னிதழிலும் தோழியர் கூட்டுப்பதிவிலும் இவரது கட்டுரைகள் தொடராக வெளிவருகின்றன அவற்றையே தனது புத்துயிர்ப்புப் பதிவில் பதிந்துள்ளார்.அண்மைய பதிவு வண்ணங்கள் சொல்வதென்ன என்ற பதிவு வண்ணங்களின்றி மனித வாழ்கை இல்லை என்கிறார்.
*********************************************************

சந்திரவதனா
ஒன்றா இரண்டா சொல்லுவதற்கு அநேகமான மின்னிதழ்கள் இணைய இதழ்கள் புலம்பெயர் நாட்டுச் சஞ்சிகைகள் ஆகியவற்றில் அடிபடும் முகம்.திசைகள்,தமிழோவியம்,பதிவுகள் இதழ்களிலும்,யாழ் இனையத்திலும், தோழியர் கூட்டுப்பதிவிலும் இவரது சிறுகதைகள் கவிதைகள் ஆகியவை வெளிவருகின்றன.தனது மன ஓசைகளுக்கென்று ஒரு பதிவையும் படித்தவை, பெண்கள்,புனரமைப்பு என்று பத்திற்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கிறார் மன ஓசை வலைப்பதிவில் அனைத்துக்குமான சுட்டிகள் கிடைக்கும்.அண்மைய பதிவு தனது பேர்த்தி சிந்து.அவரே ஒருகவிதை மாதிரி இருக்கிறார்
*********************************************************

ஈ வரிசையில் என்னுடைய இரு பதிவுகள் தன்னடக்கம் கருதிச் சொல்லாம்ல் விட்டுவிடுகிறேன்.
*********************************************************

இளைஞன்
பெயருக்கேற்ற மாதிரியே இளமைத் துடிப்பானவர்.பதிவுகள் வார்ப்பு போன்றவற்றில் ஒன்றிரண்டு கவிதைகள் பார்த்திருக்கிறேன்.இலைஞர்களுக்கென்றே ஒரு தனித் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புதியதோர் உலகம் செய்வோம் என்பது இவரது மகுடவாக்கியம்.குறும்பூ என்றெ தனது வலைப்பதிவுக்குப் பெயரிட்டு குறும்பாகவே பதிந்தும் வருகிறார்.அண்மைய பதிவு சேகுவேராவின் கவிதை ஒன்று.
*********************************************************

ந.பரணீதரன்
கரவை பரணியின் பூ மனசு என்ற பெயரில் கறுப்பு நிலவு என்ற தலைப்புமிட்டு தனது காதற்கவிதைகளைப் பதிந்து வந்துள்ளார்.யாழ் தளத்தில் இவரது கவிதைகள் பலவற்றைப் பார்க்கலாம். அண்மைக்காலமாக தளத்தை மாற்றி யாழ் தளத்தில் எழுதுகின்றார் அங்கேயும் தொடரும் அவரது காதல் கவிதைகள்.அண்மைக்காலமாக பதிவுகள் எதனையும் காணவில்லை கடைசிப்பதிவு திருகோணமலை நகரின் அழகுக் காட்சி.
*********************************************************

கரிகாலன்
தமிழ் வலைப்பதிவுகளுக்குப் புதுவரவு.என்றாலும் சரளமான நடையில் கனடாவிலிருந்து உள்ளூர் செய்திகளையும் ஈழத்துச் செய்திகளையும் என் மனவெளியில் என்ற தனது பதிவில் பதிந்து வருகின்றார்.அண்மைய பதிவு கஞ்சா கட்சி என்னும் கனடிய கட்சி ஒன்றைப் பற்றியது.
*********************************************************

சந்திரமதி
இவரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்வது ஈராக்கில் எண்ணை விற்பது போன்றது என்றாலும் பாராபட்சம் பார்க்காமல்... நாங்கள் இப்போது கௌரவ ஆசிரியர் பணியில் இருக்கும் வலைப்பூ வலைப்பதிவாளர் இதழின் ஆசிரியர்.தமிழ் வலைப்பதிவாளர்களுக்கென்று ஒரு பட்டியலை ஆரம்பித்து அதனை ஆக்கபூர்வமாகப் பேணி வருபவர்.எனது பின்னூட்டச்சத்தாளர் கட்சியின் வட்டச்செயலாளர்.இன்னும் இன்னும் சொல்லலாம் ஆயினும் அக்காவைப் பற்றித் தம்பி புகழுதல் ஆகாது என்பதால் நிறுத்துகின்றேன்.எண்ணங்கள் என்ற பெயரில் எழுதுப்பயிற்சிக்கூடம் நடத்தி வேப்பம் வடகம் பற்றிப் பதிந்து எனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டவர்.திரைவிமர்சனம் என்ற பெயரில் ஆங்கிலத் திரைப்படங்களைக் கடித்துக் குதறுகின்றார் என்று கேள்வி.
*********************************************************

மயூரன்
இலங்கையிலிருந்து வலைபதிபவர்.தமிழைக் கணனிமயப்படுத்தும் செயல்களில் இவரது பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அது பற்றிய தகவல்கள் மட்டுமன்றி பெண்ணியம் வர்த்தகம் போன்ற பல்வேறு விடயங்களில் தனது கருத்தை ம் என்னும் பதிவில்செய்து வருகிறார் அண்மைய பதிவு தமிழ் வலைப்பதிவாளர் விபரக்கொத்து அமைக்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் பதிவு.
*********************************************************

முல்லை
இது இவரது இயற்பெயர் இல்லை என்பது இவரது பதிவுகளில் தெரிகிறது ஆயினும் நீன்ட நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட குறிஞ்சி வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர்.பலகாலமாக அஜீவனுடைய குறும்படங்களின் மீதான விமர்சனத்துடன் நின்று போயிருந்த இவரது பதிவுகள் ஈழத்தில் இவரது ஊரில் நடந்த சுவையான சம்பவங்களினைத்தாங்கி புதுப்பொலிவுடன் வெளிவருகிறது.அண்மைய பதிவு சந்தைக்கு வந்த கிளி என்ற தலைப்பில் தான் மீன் வாங்கப்பேரம் பேசிய கதையைச் சொல்கிறார்.
*********************************************************

மூனா
இவரது முழுப்பெயர் தெரியவில்லை.அரசியல் கருத்தோவியங்கள் வரைந்து உள்ளங்களைக் கவர்பவர் கிறுக்கல்கள் என்று தலைப்பிட்டாலும் சித்திரங்கள் கூறும் கருத்துகள் அர்த்தம் நிறைந்தவை இலங்கை அரசியல் புரிந்தவர்களுக்கே புரியும்.புலம்பெயர் நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.யுகம் மாறும் தொகுப்பில் பல ஓவியங்கள் கருத்தையும்கண்ணையும் கவர்பவையாக இருக்கின்றன யாழ் இனையத்தளத்திலும் சில ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.துகிலிகை என்ற பெயரில் இன்னொரு பதிவு வண்ண வண்ண ஓவியங்களுக்காக வைத்திருக்கிறார்.அண்மைய சித்திரம் சத்தியமாய்த் தெரியாது என்ற தலைப்பில் அண்மையில் அரசுகளின் உதவியுடன் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கருணா விவகாரம் பற்றியது.
*********************************************************

நிர்வியா
புது வரவு சந்திரவதனா அவர்களுடைய கதைகளுக்கும் எழுத்துகளுக்கும் தான் ரசிகை என்றே ஆரம்பித்திருக்கிறார்.சின்னச் சின்ன அழகான கவிதைகள் படைக்கிறார் அண்மைய பதிவும் ஒரு கவிதைதான்.
*********************************************************

ராஜன் முருகவேல்
ஆரம்பத்தில் ஐஸ்கிறீம் சிலையே நீதானோ என்று தொடர்கதை பதிந்து நெஞ்சங்களை அள்ளிச் சென்றவர் அதன் பின்னர் நீண்ட காலம் தலைமறைவாக இருந்துவிட்டு அனுபவம் புதுமை என்ற தலைப்பில் புலம்பெயர் நாட்டில் பெற்ற சுவாரசியமான அனுபவங்களைத் தொடராகப் பதிந்தார் என்ன காரணமோ தெரியாது மறுபடியும் காணாமற் போய்விட்டார்.இவரது எழுத்துக்கள் பூவரசு சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன.யாழ் தளத்திலும் இவரது ஆக்கங்களைப் பார்க்கலாம்.
*********************************************************

ரமணீதரன்
நண்பர்களால் செல்லமாக முதிரும் அலைஞன் அல்ல என்றும் முதிரா வினைஞன் என்று அழைக்கப்படுபவர்.வசியம் செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரர்(அதில் மயங்கியதில் நானும் ஒருவர்) இவரது நகைச்சுவை இறைத்திருக்கும் பதிவுகளை பதிவுகள் தளத்திலும் சில தொகுப்பு நூல்களிலும் பார்க்கக் கிடைத்தது கவிதை கதை மட்டுமல்ல கட்டுரைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் இந்தக் கலக்கி கொஞ்சம் வித்தியாசம் மற்றவர் வயிற்றில் புளி கலக்குவது அதுதான் இவரது பொய்சார் ஊடகங்களின் முகத்திரை கிழித்தல்.அதனை விட ஈழத்து இலக்கியங்களுக்கென்று தனிப்பதிவும்.தனது பினாத்தல்களுக்கென்று ஒரு பதிவும் வைத்திருக்கிறார்.என்னுடைய பின்னூட்டச்சத்தாளர் கட்சியின் உபதலைவர்.அண்மையில் கஞ்சிக்குடிச் சாமியார் என்ற பட்டத்துடன் காணமற் போய்விட்டார் அவ்வப்போது பின்னூட்டப்பெட்டிகளில் தலைகாட்டும்போது பார்த்துக்கொண்டால் சரி.
*********************************************************

சண்முகி
இவரும் வலைப்பதிவுகளுக்குப் புது வரவு ஆனால் அலைகள் தளத்தில் இவரது கவிதைகள் சில படித்திருக்கிறேன்.கவிதை கதை இரண்டிலும் தனது முத்திரை பதித்து வருகிறார்.அண்மைய பதிவு எனக்குள்ளும் ஒரு ஆசை என்கிற கவிதை.
*********************************************************

குருவிகள்
இயற்பெயர் இதுவல்ல என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்திருக்கும்.குருவிகளின் விஞ்ஞான உலகு என்ற பெயரில் அறிவியல் செய்திகளை அழகூட்டும் படங்களுடன் அள்ளி வழங்கி வருகிறார்.இது அறிந்த செய்தி அறியாததும் ஒன்றுண்டு அழகழான மலர்களுடன் குருவிகளின் காதல்,உலகச்செய்திகள்,கவிதைகள் எல்லாவற்றையும் இன்னோர் பதிவாக தேடற்சரம் என்ற பெயரில் பதிகிறார் தள வடிவமைப்பிற்கு தனியாக ஒரு பாராட்டு.
*********************************************************

ஷ்ரேயா
என்னுடைய மருமகளாக இருந்து நேற்றிலிருந்து அக்காவாக ஆகிப்போனவர்.தமிழ் வலைப்பதிவுகளுக்குப் புதுவரவு ஆனாலும் சகஜமாகப் பழகுவதிலிருந்து எழுத்துலகிற்கு இவர் புதிதல்ல என்று தெரிகிறது மழை:சின்னச் சின்ன அழகான தருணங்கள் என்று தம் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.அண்மைய பதிவு உதட்டுச் சாத்திரம் பார்க்கிறார் உங்கள் பதிவுக்கு முந்துங்கள்.
*********************************************************

சுரதா
இவரைப்பற்றிச் சொல்வதும் மதி அக்காவைப் பற்றிச் சொல்வதும் ஒன்றுதான் இவர் புண்ணியத்தில்தான் நான் இன்று தமிழில் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.தமிழ்ச் செயலிகளுக்கு நன்கு அறியப்பட்டவர் யாழ் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர்.தனக்கென்றே பிரத்தியேகமாக சுரதா இணையம் என்று வைத்திருக்கிறார்.தமிழ்ச் செயலிகளின் அணிவகுப்பாக ஆயுதம் என்ற வலைப்பதிவையும் மருத்துவம் என்ற வலைப்பதிவையும் நடத்தி வந்தவர் அண்மைக்காலமாக இரண்டுமே தொடராமல் நிற்கிறன.யாராவது பார்த்தால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்.
*********************************************************

சுரேன் நடேசன்
தமிழ் வலைப்பதிவுலகத்திற்குப் புதுவரவு எனக்கோ பழைய உறவு.என்ன எழுதுவதென்றே தெரியவில்லை என்று ஒரு பதிவைப் போட்டுவிட்டு முழித்துக்கொண்டிருந்தாரே பார்த்து எம்முடைய திறமையைக் காட்டுவோம் என்று போனால் மளமளவென்று பல்வேறு துறைசார் பதிவுகளையும் இட்டு பலரையும் இழுத்துவிட்டார்.இப்போது கோடை விடுமுறையில் ஊர்சுற்றிப்பார்க்கப்போயிருக்கிறார்.திரும்பவும் வந்து பலவற்றை அள்ளி வழங்குவார் என எதிர்பார்ப்போம்.
*********************************************************

திவாகரன்
நிலாமுற்றத்தில் விளையாடி கடந்த ஏப்ரலோடு காணமற்போய் விட்டார்.யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.
*********************************************************

தமிழினி
இயற்பெயர் என்று தெரியவில்லை தேடியில் அகப்பட்ட பதிவு.சிந்திக்கச் சில வரிகள் என்றும் சில கவிதைகளும் பதிந்து வைக்கிறார் இன்னும் எதிர்பார்க்கலாம்
*********************************************************

வெப்தமிழன்
அப்பாடா வீரத்தமிழன்,ஆதித்தமிழன் என்ற பெயரெல்லம் பழையதாகி புதிதாக வந்திருக்கிறார் வெப்தமிழன்.வெப்தமிழன் என்ற இணையத்தளத்துக்குச் சொந்தக்காரர்.ஒரு தமிழனின் வலைக்குறிப்புகள் என்ற பெயரில் பதிந்து வருகிறர் அண்மைய பதிவு நமது ஈழநாடு பத்திரிகை யுனிக்கோட்டுக்கு மாறியது பற்றியது தொடர்ந்தும் நல்ல தகவல்களைத் தருவார் என எதிர்பார்க்கலாம்.
*********************************************************

யாழ் சுதாகர்
கேள்விகளுக்கும் விடைகளுக்கும் தனிப்பதிவு வைத்திருக்கிறார்.புத்தகம் கூட திருவாளர் சௌந்தரநாயகம் கையால் வெளியிட்டு வைத்திருக்கிறார்.கே.எஸ் ராஜாவுக்கும்,டி.எம்.எஸ் இற்கும் தனி வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார்(இவர் ஈழத்து உறவா என்பதில் சந்தேகம் சுரதா அண்ணன் பதில் சொல்வாரா)
*********************************************************

கௌசிகன்
ஈழத்து வரவு என்று தெரிகிறது.மூன்று கவிதைகளுடன் காணமர் போய்விட்டார் திரும்பி வந்தாரானால் நிறையக் கவிதைகளை எதிர்பார்க்கலாம் போலுள்ளது.
*********************************************************

கூட்டு வலைப்பதிவுகள்

தோழியர் பதிவில் ஈழத்து அம்மணிகள் பலர் எழுதி வருகிறார்கள் இங்கூ ஏற்கனவே குறிப்பிட்டவர்களில் சந்திரவதனா,சந்திரமதி,சந்திரலேகா தவிர றஞ்சி(எல்லோருக்கும் பின்னால் அக்கா சேர்த்துக்கொள்ளவும் ஏற்கனவே அம்மையார் என்று சொல்லி ஆளாளுக்கு தர்ம அடி போட்டு வாங்கி வந்திருக்கிறேன்) ஆகியோர் எழுதுகிறார்கள் இதில் றஞ்சி(சுவிஸ்) தவிர மற்றவர்களுக்கு வலைப்பதிவு உண்டு அவரையும் வலைப்பதிவுகளுக்கு இழுத்துவரும் பொறுப்பை எனது அன்பான அக்காவிடம் ஒப்படைக்கிறேன்.
*********************************************************

சூரியன் வலைப்பதிவும் ஈழத்தவர்களுடையது. ஈழத்தவர்கள் தான் எழுதலாம் என்ற எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது ஆயினும் இரண்டு பதிவுகளுடன் நின்றுவிட்டது.தொடரும் என எதிர்ப்பார்ப்போம்.
*********************************************************

யாழ்நெற் என்னும் கூட்டு வலைப்பதிவும் சுரதா மற்றும் மோகன் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது சின்னச் சின்ன குடில்களாக நிறையப்பேர் உட்கார்ந்திருக்கிறார்கள் சில நல்ல கவிதைகளும் கட்டுரைகளும் தென்பட்டன.
*********************************************************

தவறுதலாக எவருடைய பெயராவது விடுபட்டிருந்தால் பெரிய மனதுடன் பொறுத்தருளி அறியத்தந்தால் சேர்த்துக்கொள்வேன்

Posted by Eelanathan at July 5, 2004 10:58 PM |


நானும் வலைப்பதிவுகளும்..... - nirviyam

நான் தினமும் office வந்தவுடன் office mail check பண்ண முதல் திறந்து பார்ப்பது சந்திரவதனாவின் வலைப்பதிவு தான். அவர்கள் எழுத்துக்களை வாசிக்கும் போது ஊரில் உறவாடுவது போல் ஒரு சந்தோஷம். (ஐயோ மற்றவர் பதிவுகழும் வாசிப்பேன். எனினும் எனது Best choice சந்திரவதனாவினுடையதுதான்!!!!)

யாழ்ப்பாணத்தை விட்டு 10 வயசில் கொழும்பு வந்தாகியாயிற்று. 21 வயதில் கனடா வாசம். அதுவும் Calgary, Alberta.

இங்கு தமிழில் எதுவுமே கிடையாது. 5 வயதில் தொடங்கிய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் 15, 16 வயதிலிருந்து ஒரு வித வெறியாகவே மாறிவிட்டது. எதுவும் படிக்காமல் தூங்கவே முடியாது. ராஜேஷ்குமாரில் தொடங்கி, லக்ஷ்மி, சுஜாதா, ரமணி சந்திரன், சாண்டிலியன், கல்கி ???சங்கரி, இந்துமதி கடைசியாக பாலகுமாரன். பரிட்சைக்குப் படிக்கும் போது கூட நல்லதொரு கதைப்புத்தகம் கிடைத்துவிட்டால் ஒரே மூச்சில் அதனை வாசித்தபின் தான் பாடங்களே.

இங்கு வந்தபின் மூளைப் பிசாசு தமிழ், தமிழ் என்று என்னை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டது. online இல் குமுதம், ஆனந்தவிகடன் அது இது என்று அப்பப்போ அதற்கு தீனி போட்டும் அடங்கவில்லை. தமிழில் ஒரு துண்டுப்பிரசுரம் கிடைத்தால் (Toronto விலிருந்து parcel ஏதாவது சுற்றி வரும் paper) கூட அவாவினால் விழுந்தடித்து வாசிப்பது வழக்கம்.

கடைசியாக ஊருக்குப் போன போது எனது suitcase நிறைய புத்தகங்கள். பொன்னியின் செல்வனும் அடக்கம். (6ம் வகுப்பில் முதல் தடவை வாசித்தது கடைசியாக வசித்தது 10வது தடவை என நினைக்கிறேன்.) எல்லாம் ஒரிரு வாரங்களிலெயே வாசித்து முடித்தாயிற்று.

Internet ல் மேய்கையில் ஒரு தடவை அகப்பட்டது சந்திரவாதனாவின் வலைப்பதிவு. அதிலிருந்து மற்றவர்களின் வலைப்பதிவுகளின் அறிமுகம். இப்போதெல்லாம் என் மூளைப் பிசாசு என்னை அதிகமாகப் படுத்துவதில்லை. சமர்த்தாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வலைப்பதிவுகளை மேய்ந்து ஆரவாரிக்கிறது.

சரி நம்ம மூளைப் பிசாசிற்கு இன்னும் கொஞ்சம் தீனி போடலாமே என்று இந்த வலைபதியும் வேலையை அடியேனும் ஆரம்பித்தேன். ஒவ்வொரு எழுத்தினை அடிக்கவும் நீண்ட நேரம் எடுப்பது போல தெரிகிறது.

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" -இப்பொழுது கொஞ்சம் keyboard பழக்கத்திற்கு வருகிறது. ஆனாலும் தேடித் தேடி type பண்ணும்போது கவனம் சிதறுகிறது. Keyboard இன்னும் கொஞ்சம் பழகினால் நிறைய எழுதலாம்....அதாவது சீராக Intersting ஆக எழுதலாம்.

10 நாட்கள் Toronto போகிறேன். உற்ற நண்பியின் திருமணம். மற்ற நண்பியருடன் கும்மாளம். மிகுதி விரைவில்......

Posted by nirviya at June 24, 2004 09:54 PM

comments
நிர்வியா

உங்களைப் போலத்தான் நானும்.
யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளி வந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.
சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும் வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது
தலையைப் பிய்த்துக் கொள்வேன்.ரோட்டிலே ஒரு துண்டுப் பேப்பர் பறந்து சென்றாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.

நட்புடன்
சந்திரவதனா

Posted by: chandravathanaa at June 27, 2004 11:39 AM

இன்று ஆரம்பிக்கிறேன் - nirviyam

தமிழ்நாதம் மூலம் அறிமுகமாகி
சந்திரவதனாவின் எழுத்திற்கு அடிமையாகி
வலைப்பூக்களை தினமும் வட்டமிடும் வண்டாகி
மரத்தடி எழுத்துக்களின் வாசகியாகி
நாமும் ஒரு தமிழ் வலைப்பக்கம் அரம்பிக்கலாம் என முடிவெடுத்து
இன்று ஆரம்பிக்கிறேன். இனி என்ன எழுதலாம் என்று யோசிக்கிறேன்?

Posted by nirviya at June 10, 2004 04:57 PM

Donnerstag, Juni 24, 2004

பாலியல், சட்டமீறல்,தண்டனை

மயூரனின் பதிவிலிருந்து - 18.6.2004

நிதர்சினி வழக்கின் தீர்ப்புகள் வெளியான நிலையில், மனவோசை வலைக்குறிப்பில் இதுபற்றிய விவாதம் ஒன்று தொடர்ந்து செல்வதைப் பார்த்தேன்.

குற்றங்கள்-திருத்துதல்-தண்டனை பற்றிய என் நீண்டகால குழப்பங்களும் அதுபற்றிய என் இதுநாள்வரையான சிந்திப்புக்களும் மறுபடியொருமுறை என்னுள்ளே முனைப்புறுத்தப்படுவதற்கு இந்த விவாதம் வழிதந்திருக்கிறது.

மேற்கண்ட விவாதம் பாலியல் சட்டமீறல்களைப்பற்றியே தொடர்வதால் நானும் அந்தப் பரப்பினுள்ளேயே நின்றுகொள்ள முனைகிறேன்.

இன்றைக்கு தினக்குரல் பத்திரிகையை காலையில் வாசித்தபொழுது மனதுக்குள்ளேயே ஒரு கணக்கெடுப்பு செய்துகொண்டேன்.
பாலியல் சட்டமீறல்கள் பற்றி வெளியான செய்திகள் மொத்தம் நான்கு.
அதிலொன்று பத்துவயது பெண் மீதான வன்புணர்ச்சி பற்றியது.

இப்போதெல்லாம் இப்படியான செய்திகள் நாளேடுகளில் மிகச் சாதாரணம். இலங்கையிலிருந்து வருகிறசெய்திகளாக இருந்தால் அது கட்டாயம் அங்கீகரிக்கப்படாத பாலுறவு பற்றியதாகத்தான் (Incest,Child abuse) இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.

வீட்டிலிருக்கும் பெரியவர்கள் இச்செய்திகளை பார்த்துவிட்டு "காலம் கெட்டுப்போச்சு" என்றோ அல்லது "கலி முத்திப்போச்சு" என்றோ பெருமூச்செறிந்துவிட்டு தமது அடுத்தவேலைகளை கவனிக்கப்போய்விடலாம்.
முன்பதின் பருவத்தினர் இச்செய்திகளை கிளர்ச்சியூட்டும் உரைப்பகுதியாக வாசித்துவிட்டுப்போகலாம்.

என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு செயற்பாடுகளும் ஒரேமாதிரியானவைதான்.
கூடவே பாலியல் சட்டமீறல்களை தண்டனை மூலம் இல்லாதொழிக்கலாம் என்ற வரட்டு வாதங்களும், திருடனாய்ப்பார்த்து திருந்தச்சொல்லும் தோல்வி வாதங்களும் இவற்றோடு சேர்க்கப்படலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த நாளேடு ஒன்றில் வெளியான இத்தகைய செய்திகளை எண்ணிப்பார்த்தால், இருபது வருடங்களுக்கு முன்னால் வெளியான வற்றை எண்ணிப்பார்த்தல் உருப்படியானதாயில்லையென்றாலும் கூட ஒரு புள்ளிவிபரம் கிடைக்கும். (நான் இதுவரை எண்ணிப்பார்க்கவில்லை) சிலவேளைகளில் இப்புள்ளிவிபரம் - என் நம்பிக்கைக்கு எட்டியவரையில்-செய்தியாளர்களின் திறமை பற்றிய தகவல்களைத் தருமேயொழிய பாலியல் சட்டமீறல்களைப்பற்றி எந்த உண்மையான தகல்வல்களையும் தராது.

மனித இனம் பாலியலுக்கான சட்டங்களைக்கண்டுபிடித்த காலத்திலிருந்தே பாலியல் சட்டமீறல்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

சமூக ஒழுங்காக்கம் என்பது பெரும்பாலானவர்களுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று சொல்லப்பட்டாலும், பலவேளைகளில் அது அதிகார வர்க்கமாக இருக்கும் சிறுபான்மையினரது நன்மைகளுக்காகவே நடைபெற்றுவிடுவதுண்டு. சமூக ஒழுங்காக்கம் விளிம்பு நிலையிலிருப்பவர்களை எப்போதும் தாக்கிவந்ததே வரலாறு. தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் தூக்கிவைத்து ஆடப்படும் சமூக ஒழுங்காக்கம் ஆண்நிலைப்பட்டது. அதனால் தான் அதன் அத்தனை நுணுக்கமான தளங்களிலும் பெண்கள் திட்டமிட்டே ஒடுக்கப்படுகின்றனர்.

"புலம் பெயருமளவுக்கு எம் வாழ்வில் அவலங்கள் நேர்ந்திருக்கும் காலத்தில் இப்படியொரு தகாத காரியத்தை எமது தமிழரே எப்படிச் செய்யத் துணிந்தார்களோ...?"
என்று ஒருவர் கருத்துத் தெரிவிக்கிறார். அவரைப்பார்க்க பாவமாக இருக்கிறது.
தமிழர்களுக்குத்தான் இப்படியான உரிமைமீறல்களை செய்வதற்கான மிகச்சிறந்த கலாச்சாரப்பின்புலம் இருக்கிறதே.
தமிழ் கலாச்சாரத்திலாகட்டும், தமிழர்களின் சமயங்களிலாகட்டும், அவர்களின் முதுபெரும் இலக்கியங்கள், மொழி எல்லாவற்றிலும் பெண் என்றால் வெறும் உடல்தானே?
பிள்ளைபெறும் இயந்திரம்தானே?
தம்மால் ஆளப்படக்கூடிய எதனையும் அவர்கள் பெண்ணாய்த்தானே பார்ப்பார்கள்?
தாய்மைகூட மென்மையாகத்தான் இருக்கவேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பார்கள்?

இவர்களால் மட்டும்தான் மற்றைய பெண்களின் உடலில் அவர்கள் அனுமதியின்றி தலையீடு செய்யமுடியும்/


மேற்கின் கலாசாரம் கூட எமது கலாசாரத்துக்கு இந்தவிஷயத்தில் சமமானதுதான்.
அது புறநிலையாகவே, பெண்களை ஒடுக்குகிறது நாம் அகநிலையாக மிகத்திட்டமிட்டு நுணுக்கமாக ஒடுக்குகிறோம்.

பெண்ணின் உடல்மீதான அதிகாரம். அதுதான் எமது கலாசாரத்தின் சாராம்சம். இதனை மறுத்துரைக்க முனைபவர்களது இறுகிப்போன சிந்தனைகளை கனகாலத்துக்கு பெண்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இந்தப்பின்புலத்திலே பாலியல் சட்டமீறல்களை பார்ப்பது நல்லது.

என்னைப்பொறுத்வரையில் ஒருவரின் அனுமதியின்றி அவரின் எந்த விடயத்திலும் தலையிடுவது குற்றம். இதனை அடிப்படையாகக்கொண்டே நான் பாலியல் குற்றங்கள் எவை என வரையறுத்துக்கொள்வேன்.
ஏமாற்றுவது எந்த வகைக்குள் வரும்?
ஏமாளிகளை உருவாக்குகின்ற கல்விமுறையின், சமூக முறையின் குற்றம் அது.

ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ள, ஒன்ன்றையொன்று தீர்மானிக்கிற ஏராளமான விஷயங்கள் இதில் சம்பந்தப்படுகிறது

பெண்களுடைய உடையெல்லாம் பளபளப்பாகவும், கண்ணைப்பறிப்பதாகவுமே இருக்கவேண்டும்.
இது எழுதப்படாதவிதியாகிவிட்டது. பெண்களை அழகுக்கு அடிமையாக்கி, பொம்மைகளாக்கும் ஆணாதிக்கத்தின் சுயனலம்.

பெண்கள் நலிவானவர்கள் என்று சமூகத்தின் அடியாழம்வரை வேரோடிப்போயிருக்கும் கருத்து.

இவற்றையெல்லாம் சமூகத்தில் விதைப்பவர்கள் யார்?
அவர்களைப் பிடித்து தூக்கில் போடுங்கள்.

பட்டினத்தாரை, திருவள்ளுவரை, ஒளவையாரை, கண்ணதாசனை, வைரமுத்துவை, கம்பவாரிதியை, வசந்தா வைத்தியநாதனை தூக்கில் போடுங்கள்.

எல்லோரும், எல்லாமுமாக சேர்ந்து ஒருவனை மனக்குழப்[பத்துக்குள்ளாக்கி குற்றம் செய்யத் தூண்டிவிட்டு அவனை மட்டும் தூக்கில் போடுவது எந்தவிதத்தில் நியாயம்?

விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட, அல்லது அவர்களால் உரிமைகோரப்படாத கொலைகளை (வடக்கில் நிகழ்ந்தவை) ஒருவர் உதாரணம் காட்டினார்.

கம்பத்தில் கட்டிவைத்து, ஊர்பார்க்க குற்றங்களை எழுதிவைத்து பயங்கரமாக செய்யப்படும் கொடூரமான கொலைகள், சமூகத்தில் அதிர்வினையும் பயத்தினையும் ஏற்படுத்துவது சகஜமே.
கம்பக்கொலைகளாகட்டும், இன்றைய பிஸ்டல் கொலைகளாகட்டும், சரிபிழைகளுக்கு அப்பால் சமூக மனநிலையில் வெண்டாத தாக்கங்களை விளைவிப்பது ஒருபுறமாக இருக்க, அதைக்கொண்டுபோய், மூடிய நிலையில், பொதுமக்கள் பார்க்க முடியாவண்ணம், மக்களே, வழக்கினை மறந்துபோன நிலையில் செய்யப்படும் மரணதண்டனைகளோடு ஒப்பிடுவது என்றுமே சரியாகாது.

இங்கே நான் தந்திருபதெல்லாம் மிக மேலோட்டமான குறிப்புகள் மட்டுமே,.

ஆண் மனம் பற்றிய சரியான புரிதலோடு செய்யப்படும் பெண்ணிலை ஆய்வுகளின் மூலம் இதுபற்றியெல்லாம் விரிவான விளக்கங்களை உலகம் பெற்றுக்கொள்ளமுடியும்.


உடனடித் தீர்வுபற்றி பலரும் கவலைப்படுகிறார்கள்.

என்னகேட்டால், ஒன்று சொல்வேன்.

"விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு, ஆணாதிக்கத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தினை உடனடியாக ஆரம்பிப்பதே எல்லாவற்றுக்குமான தீர்வுக்கு உலகளாவிய அளவில் முதற்படியாக இருக்கும்."

posted by மு.மயூரன் at 9:41 PM

Donnerstag, Juni 17, 2004

மார்க் ஷீட் -5 - Jeyanthi

June 16, 2004

தமிழ் இணைய உலகில் ஆக அதிகஎண்ணிக்கை வலைப்பூக்களை வைத்திருக்கிறார் சந்திரவதனா செல்வகுமரன் என்றே தோன்றுகிறது. அதல்ல பெரியவிஷயம். அவற்றை ரசிக்கக் கூடியவகையில் தொடர்ந்து புதுப்புது செய்திகளை இட்டு பளிச்சென்று மெச்சும்படி வைத்திருக்கிறார். பெருமையாக இருக்கிறது ! பிரமிப்பாகவும் கூட! ஒரே ஒரு சின்னக்குறை. அதுகூட இல்லை, இது என் கருத்து மட்டுமே. பதிவுகளின் முக்கியப்பகுதியை மட்டும் இட்டு 'மேலும் படிக்க' என்ற சுட்டி கொடுத்தால் ஒரே பக்கத்தில் சட்டென்று விவரங்கள் கிடைக்கும். இது எல்லா வலைப்பதிவு உரிமையாளர்களும் பின்பற்றினால், வலை மேய்பவர்கள் என்னதான் அவசரத்தில் இருந்தாலும், பத்தில் ஒரு தலைப்பாவது அவர்களை ஈர்க்கும் என்று நினைக்கிறேன்.வாசகவட்டம் விரியும்.

சரி,.. இனி
----

மார்க் ஷீட் -5

மகளிர்--regularity - 89% , content- 88% , லேயவுட் - 90% , Organisation -- 89%,மொத்தம் -- 89%
பிடித்தது -- லேயவுட் /ஒரு தேர்ந்த மருத்துவரின் வைப்பதிவைப்போலிருப்பது.

மனவோசை--regularity - 87% , content- 88% , லேயவுட் - 89% , Organisation -- 89% ,மொத்தம் --88.25%
பிடித்தது --சூப்பரான புகைப்படங்கள் ! மற்றும் அழகிய லேயவுட்

மாவீரர்கள்--regularity - 85% , content- 88% , லேயவுட் - 87% , Organisation -- 90%,மொத்தம் --87.5%
பிடித்தது -- மாவீரர்களின் பால் உள்ள அக்கறை. படிக்கப்படிக்க வேதனையாகயிருந்தது.

படித்தவை--regularity - 78% , content- 90% , லேயவுட் - 81% , Organisation -- 88% ,மொத்தம் --84.25%
பிடித்தது -- பகிர்ந்துகொள்ள விழையும் ஆர்வமும் மனிதநேயமும்! ஜனா என்னை மிகவும் நெகிழ வைத்தான்.

பெண்கள்--regularity - 88% , content- 89% , லேயவுட் - 88% , Organisation -- 89%,மொத்தம் -- 88.5%
பிடித்தது -- பெண்ணினத்துக்குக் கொடுக்கும் நியாயமான குரல்!

Rehabilitation--regularity - 87 % , content- 89 %, லேயவுட் - 87% , Organisation --89% ,மொத்தம் --88%
பிடித்தது -- அன்றாடம் பிறந்த மண்ணில் நடப்பவற்றில் கொள்ளும் அக்கறை

Sammlung--regularity - 76% , content- 87% , லேயவுட் - 87% , Organisation -- 89%,மொத்தம் --84.75%
பிடித்தது -- வகைவகையான தலைப்புகள்!

அப்பாடா, எல்லாருக்கும் மார்க்ஸ் போட்டாச்சு (படிக்கமுடியாத பதிவுகளைத்தவிர)!
இனிமேல், கொல்லென்று இந்தவாரம் புதிதாய்ப் பூத்திருக்கும்
சிலமலர்களை முகர்ந்து எழுதவேண்டும். நேரமிருந்தால்,
இன்றைக்கே. இல்லையானால், நாளைக்கு எழுதினாப் போச்சு,..

அனைத்துப் பதிவுகளும் http://tamilblogs.blogspot.com என்ற பட்டியலில் படிக்கக்கிடைக்கும்.

வணக்கங்கள். என்றும் அன்புடன், ஜெயந்தி சங்கர்.

Posted by Jeyanthi at June 16, 2004 07:39 PM

Samstag, April 10, 2004

நாட்டாமை

Saturday, April 10, 2004
A-Z


வேதம் ஓதற வேதாள நந்திக்கு ஆப்படிச்சுட்டாங்க. ரஜினிக்கு ஆப்பு வச்சா உனக்கு ஆப்பு வக்கறோம்னு மெரட்றாங்க நெறயப் பேரு. பத்ரி லாஹூரு போயி கிரிக்கட்டுப் பாக்கறாரு. ஹரப்பால்லருந்து நமக்கு ஏதாவது வாங்கிட்டு வாய்யா.

ஏய்யா இன்னமு(ம்) வெள்ள கருப்புன்னு பாக்கறீங்க, வெள்ளக்காரன்ட்டருந்து நல்ல விசயத்தக் கத்துக்கங்கய்யான்னு கோபபடறாங்க சந்திரவதனா. நமக்கு பயமாப் போச்சு, நாம எலங்க மொரளிக்குச் சப்போர்ட்டு பண்ணதப் பத்திக் கேள்விப்பட்டா நம்மயும் திட்டுவாங்களோன்னு. கருப்பு வெள்ளயப் பத்திச் சந்திரவதனா சொன்னதுக்கு எதிர்கொரல் கொடுக்கறாரு சு.பசுபதி .

சித்தன் அப்பப்ப வர்றாரு, போறாரு. 'சித்த' நேரம் வீட்ல உக்காந்துட்டுப் போய்யா. தூர் வார்றேன் பேர்வழின்னு சொல்லி ஓடயப் பொரட்டிப் போட்டுட்டாரு கைகாட்டி. மண்ணுக்குள்ள கெடந்த நெறய பச்சக்கல்லுக வெளிய வந்து மின்னிக்கிட்டிருக்கு. எலக்சன்னுல நிக்கறவங்க நெலபுலம் நீச்சு பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு வழி சொல்றாரு ஹரி. நல்ல, நாட்டுக்குத் தேவையான விசயம் எழுதறதுக்கு ஆளில்லைன்னு பிரபு கொற சொன்னதுக்கு ரோசம் வந்து பொருளாதாரம் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டாரு பெரகாசு.

நாமல்லாம் உருப்படாதவங்கன்னு சொல்லுது ஊசிப்போன இட்லி. உங்கள மாதிரி மனுசனுகள்ளாம் இருந்தா ஊர்ல எப்படி மழ பெய்யும்னு திட்றாரு ஜோதிராமலிங்கம். மழக்கி ஒதுங்கின எடத்துல தன் 'ஆள'ப் பாத்துருக்காரு நா.கண்ணன். ஏப்ரல் ஃபூல் பண்றவங்களப்பத்திச் சொல்றாரு பா.கண்ணன் . தமிழ்ல பொரகுராமு எழுத ஆசப்பட்டா இவருகிட்டக் கேளுங்க. பொரளியெல்லாம் நம்ப வேண்டாம்கறாரு காசி. (உங்க செல்போன்ல 809 க்கு போன் பேச ரெடியா?). மனுசனுக தோணி வளந்ததப்பத்திக் குருவிக சொல்லுதுக. சொல்ற விசயம் சரியான்னு பாத்துச் சொல்லுங்கங்கறாரு மெய்யப்பன். தமிழ் நாட்ல தற்கொல ஏன்னு அலசறாரு. மஞ்சள் சாப்பிட்டா புற்று நோய் வராதாமே. ஆவுடையார் கோயிலுக்கு இந்த வழியாப் போங்க. கண் பொரையப்பத்தித் தெரியணுமா, இராதாகிருஷ்ணன்ட்ட கேட்டுக்குங்க. பொறம்போக்கு பத்தித் தெரியணுமா, ரிக்சாக்காரங்கிட்ட கேளுங்க.
தங்கமணியோட தவளைக்கு சவப்பெட்டி செஞ்சு குடுக்கறாரு செல்வராசு.
இருக்குது ஆனா இல்லைன்னு புதுசா ஏதோ கொவாண்டம் தியரி சொல்றாரு சங்கரு. பொதுக்கூட்டத்துக்குப் போயி கலக்கிட்டுருக்காரு சுந்தரவடிவேலு. (காமராஜர் ஆட்சி மாதிரி ஒங்க ஆட்சிலதான் மக்கள் பொதுக்காரியத்தப் பத்தி யோசிக்கறாங்க...). எலக்சனுக்காக தனியா குடிச போட்ருக்காரு மாலன். (எலக்சன் முடிஞ்சதும் கலச்சிருவீங்களா?). குதிகால் வலியப்பத்தி இங்க தெரிஞ்சுக்குங்க. எலங்கத் தேர்தலப்பத்திச் சொல்றாரு திவாகரன்.

பிரசவத்தப்பத்தி ஒரு நல்ல கட்டுர இங்க இருக்குது. நெறய நல்ல விசயங்களப் படிச்சு எழுதிறாங்க சந்திரவதனா. ஆனா நம்ம கருத்துக்களச் சொல்ல கொஞ்சம் comments வழியா எடங் குடுத்தா நல்லா இருக்கும். பூண்டு சாப்பிடுங்கய்யா. ஒடம்புக்கு நல்லதாம்.

இணயத்துல வர்ற இதழ்களயல்லாம் தொகுக்கறாரு நக்கீரன்.
அப்பாடா ஒரு வழியா முடிஞ்சதப்பா நம்ம பஞ்சாயத்து. ஒரு வாரத்துக்கு நம்மால எந்திருக்க முடியாதுங்கோ.

Donnerstag, April 08, 2004

என் மூக்கு

வாசகர் கடிதம் பகுதியில்தான் காரம் ஜாஸ்தி.

தன் படைப்புக்கு பின்னூட்டமாய் வந்த ஜீவமுரளியின் கடிதத்தை, சந்திரவதனா பிரசுரித்து, அதற்கு தன் பதிலையும் அளித்துள்ளார். அவருடைய கதையை நான் படிக்கவில்லை ஆயினும், அவர் கடித்திலிருந்து என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க் முடிகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை இந்தியர்கள் சற்று இளக்காரமாக்த்தான் பார்க்கிறார்கள் என்று நானும் கருதுகிறேன். வளர்ப்பு சார்ந்தும், படிப்பு சார்ந்தும்தான் குணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று நாம் என்னதான் தத்துவம் பேசினாலும், ஒருவருடைய முகத்தையும், உடலமைப்பையும், நிறத்தையும், பார்த்துத்தான் பெரும்பாலானவர்கள் பற்றிய முடிவுக்கு வருகிறோம். 'மிஸ்ஸிஸிபி மசாலா ' என்ற படத்தில் உள்ள ஒரு இந்தியப் பெண் கதாபாத்திரத்தை பார்த்து டென்ஸல் வாஷிங்டன் ஒரு கேள்வியைக் கேட்பார். பளாரென்று அறையும் கேள்வி அது.

தமிழ்நாட்டில் கூட சாதி ரீதியான பாகுபாடுகள் பார்ப்பதாக, பிராமணர்களை சாடும் பெரும்பாலானோர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகளை வச்தியாக மறந்து விடுகின்றனர். தான் ஒரு தாழ்ததப்பட்ட சாதியை சேர்ந்தவரை எப்படி அணுகுகிறோமோ , அதைப் போலத்தான் பிராமணர்கள் தன்னை அணுகுவார்கள் ' என்று ஒரு பிள்ளைக்கோ, தேவருக்கோ, வன்னியருக்கோ, முதலியாருக்கோ தோன்ற வேண்டும். அது தோணாதவரை, குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஜாதி தரும் அந்தஸ்து தனக்கு, வேண்டுமென்றால் , அது எல்லாருக்கும் வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஜீவமுரளியின் கடிதத்தில் இருந்த 'யாழ்ப்பாண கிடுகுவேலி மனோபாவம்தான் கறுப்பர்களை வெறுக்கச்செய்கிறது ' என்ற வரிகள் யாழிலும் இத்தகைய தமிழ்நாட்டு மனோபாவம் நிரம்பிக் கிடப்பதை குறிப்பதாகக் காண்கிறேன். அந்த வரியின் முழு அர்த்தம் விளங்காவிடினும், ' யாழ்ப்பாணத் தமிழர் மலையக / கொழும்புத் தமிழர்களை சற்று இளக்காரமாகத்தான் நினைக்கிறார்கள் ' என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இருக்கிறது.

உன்னிப்பாகப் பார்த்தால் , உலகமெல்லாம் நீக்கமற இறைவன் நிறைந்திருக்கிறானோ இல்லையோ,
இம் மாதிரியான சாதி, இன, மத , நிற ரீதியான வேறுபாடுகள் நிறைந்து காணப்படுவது தெளிவாகத் தெரியும்.

இதன் தொடர்பில் நான் முன்பொருமுறை கிறுக்கியது இங்கே.....

posted by NPSR @ 2:33 PM
Wednesday, April 07, 2004

திசைகளில் வெளியான கதையில் பிரதேசவாதம்?

திசைகள் மின்னிதழில் வெளியான எனது பயணம் சிறுகதைக்கு
ஜீவமுரளியின் எதிர்வினையும் அவருக்கான எனது பதிலும் இம்முறை திசைகளில் வெளியாகியுள்ளது.
அதை இங்கேயும் பதிக்கிறேன்.


தோழமையுடன் சந்திரவதனாவிற்கு

ஒரு ஆப்பிரிக்க ஆண்தனத்திற்கும், வெள்ளைக்கார ஆண்தனத்திற்கும் வித்தியாசங்கள், அல்லது ஆசிய மதிப்ணபீடுகளின் பெறுபேறுகள் என்னவென்றால் எங்களின் வெள்ளைத்தோல் அடிமை மனநிலைதான்.

ஒரு ஆணின் புத்தி என்ற வகையில் உங்களின் மதிப்பீட்டுடன் உடன்படுகிறேன்.;ஒரு ஆபிரிக்கன் என்ற உங்களின் இனவாத உணர்வுப்புத்தியின் கீழ் வெளிப்படுவனவெல்லாம் யாழ்ப்பாண கிடுகு வேலி விசயங்களே.

இனவாதமும் சாதிவெறியும் எந்த இலக்கியவாதியையும் விட்டுவைப்பதில்லை

அன்புடன்
ஜீவமுரளி

------------------------------------------------------------------------------------

வணக்கம் ஜீவமுரளி!

உங்கள் தோழமை நிறைந்த கருத்துக்கு மிகவும் நன்றி.

இனம், மதம், தேசியம், நாடு என்ற பேதமின்றி எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்தம் குணங்களும் இந்நாட்டவர் நல்லவர் என்றோ அல்லது இந்நாட்டவர் கெட்டவர் என்றோ சொல்ல முடியாதபடிக்கு எல்லோரும் மனிதர்கள் என்பதற்கமைய பல்வேறு இயல்புகளைக் கொண்டுள்ளது.

ஆனால் பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... என்று மாறுபடுகிறது.

திடீரென்று புரியாத பாசையில் கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்...... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்........நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும் இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்தவிதப் பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசியபடி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.

இவன் ஆப்பிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் - தொலைபேசி இலக்கத்தைத் தருகிறாயா..? முகவரியைத் தருகிறாயா..? - என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.

எனது கதையில் வந்த இந்த வரிகளில் ஆபிரிக்க நாட்டவரின் பண்போ அன்றிப் பழக்கவழக்கமோதான் சுட்டப் படுகிறது. ஆபிரிக்க நாட்டவன் கூடாதவன் என்ற தொனி எந்தக் கட்டத்திலும் இல்லை.

இதற்குள் பிரதேசவாதத்தையோ அல்லது இனவாதத்தையோ பார்க்க முனைந்த உங்கள் மனதுள்தான் இனவாதம் தொனிக்கிறது. யாழ்ப்பாணக் கிடுகுவேலி என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் கடுப்பில் உங்கள் பிரதேசவாதமும், வெள்ளைத்தோல் அடிமைநிலை என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் எரிச்சலில், வெள்ளைத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பும் கறுப்புத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையும் அதனால் ஏற்பட்ட அடிமை மனப்பான்மை உணர்வுகளும் தெரிகின்றன.

ஐரோப்பியர்களை இனத்துவேசம் பிடித்தவர்கள் என்றும் கலாச்சார சீரழிவாளர்கள் என்றும் சொல்லித் திட்டும் பல ஆசியரை நான் சந்தித்துள்ளேன். உண்மையில் இந்த இனத்துவேசம் என்பது இப்படித் திட்டும் ஆசியர்களிடம்தான் குறிப்பாக எமது இனத்திடம்தான் அதிகமாக உள்ளது என்பதை நான் அடித்து வைத்துச் சொல்லுவேன்.

ஓரு ஐரோப்பியனின் நல்ல பண்புகளை நல்ல கண் கொண்டு பார்க்கத் தெரியாதவர்கள்தான் இப்படி வெள்ளைத்தோல், கறுப்புத்தோல் என்று பேச முற்படுவார்கள்.

ஒரு ஐரோப்பியனுக்கு உள்ள பண்புக்கும் ஆப்பிரிக்கனுக்கு உள்ள பண்புக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு. அதை நீங்களோ நானோ மறுக்க முடியாது. ஐரோப்பியன், ஆபிரிக்கன் என்று மட்டுமல்ல நான் மேலே குறிப்பிட்டது போல பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... வளர்ந்த சூழ்நிலை, வளர்க்கப் பட்ட விதம், பிறந்ததிலிருந்தே அவர்களோடு ஊறிய சில நடைமுறைகள் என்பவற்றைப் பொறுத்து மாறுபடும்.

ஐரோப்பியரிடம் ஒரு பொது இடத்தில் பேசும் போது மற்றவர்களைத் தொந்தரவு பண்ணாத விதமாக மெதுவாகப் பேசும் தன்மை உண்டு. ஆப்பிரிக்கரிடமும், துருக்கியரிடமும் மற்றவர்கள் பற்றிய பிரக்ஞை இன்றி பொது இடங்களில் தமது பாசைகளில் உரத்துப் பேசும் தன்மை உண்டு. விதிவிலக்காக இவர்களில் ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்திடம் திருத்திக் கொள்ளப்பட வேண்டிய இந்தக் குறைபாடுகள் நிறைந்த தன்மைகள் நிறையவே உள்ளன. இதே போல ஆசியர்களிடமோ அன்றி, ஆப்பிரிக்கர்களிடமோ உள்ள நல்ல பண்புகளில் சில ஐரோப்பியர்களிடம் இல்லாமல் இருக்கிறது. இங்கு இனவாதமோ நிறபேதமோ கருத்தில் கொள்ளப் படத் தேவையில்லை. பிறப்பிலிருந்தே அவரவர்களோடு கூட ஒட்டி வந்த சில பழக்க வழக்கங்கள் அவர்களைப் பண்புகளால் பிரிக்கிறது.

உதாரணத்துக்கு எங்களுக்கு முந்தைய தலைமுறை எமது தலைமுறையை அடித்துத்தான் படிக்க வைத்தார்கள். - அடியாத மாடு படியாது - என்று சொல்லி கண்டிப்பாக அடித்துத்தான் வளர்க்க வேண்டும் என்பது போன்றதொரு மாயையை எம்முள் கூட ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இதன் காரணமாக இன்றும் கூட ஐரோப்பியாவில் கூட எம்மவர் தமது பிள்ளைகளின் பிரச்சனைகளின் போது முதல் ஆயுதமாக - அடி - யைத் தான் கையாள்கிறார்கள். இதுவே ஒரு ஐரோப்பியனாக இருந்தால் பிரச்சனை என்றதும் பிள்ளை பாடசாலையால் வந்ததும் முதலில் அவனைச் சாப்பிட வைத்து அதன் பின் இன்று உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லி அதற்கொரு நேரத்தைக் குறித்து அதன் பின் வீட்டிலோ, அல்லது வெளியில் நடந்தோ, அல்லது ஒரு பூங்காவிலோ மிகவும் அமைதியாகவும், ஆறுதலாகவும் பேச்சைத் தொடங்கி... பிரச்சனையைப் பற்றிப் பேசி, பிள்ளையின் மனநிலையை அறிந்து.... பிரச்சனை தீர்க்கப் படுகிறது. (100வீதமான ஐரோப்பியப் பெற்றோர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்றோ இது விடயத்தில் பிழை விடமாட்டார்கள் என்றோ சொல்வதற்கில்லை. விதிவிலக்குகள் எங்கும் உண்டு.) இதுவே ஒரு தமிழன் வீட்டில் என்றால் இது ஒரு பிரளயமாகி விடும். இந்தப் பண்பு அதாவது பிள்ளைகளின் பிரச்சனைகளைக் கையாளும் பண்பு கூட நாட்டுக்கு நாடு வேறு படுகிறது.

இதே நேரம் ஒரு ஆப்பிரிக்கனோ அன்றி ஒரு ஆசியனோ சிறு வயதிலிருந்தே ஐரோப்பியாவில் வாழும் நிலை ஏற்படும் போது அவனது பண்பு இன்னும் வேறு விதமாக இருக்கும். தந்தையைப் போல பொது இடத்தில் சத்தம் போட்டுப் பேச மாட்டான். ஏனெனில் அவன் ஐரோப்பியரின் பண்பையும் பார்த்துக் கொண்டே வளர்கிறான். அவனது பண்புகள் அவன் வீட்டுக்குள் நடைமுறையில் இருக்கும் சில பண்புகளும், ஐரோப்பியப் பண்புகளும் கலந்து தனது வசதிக்கேற்ப தெரிவு செய்யப் பட்டு நல்லதோ கெட்டதோ வேறுபட்டதாகவே இருக்கும்.

இதே போலத்தான் பெண்களை அணுகும் முறையிலான பண்புகளும் ஆணின் குணம், அல்லது பெண்ணின் குணம் என்பதோடு மட்டும் நின்று விடாது இனம் மதம் இடத்துக்கேற்பவும் வேறுபடுகிறது.

உதாரணத்துகுக்கு ஒன்று சொல்கிறேன்.

இது சில மாதங்களின் முன் லண்டனில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். கணவனை இழந்த அந்தத் தமிழ்ப்பெண் 12 வருடங்களாக அந்த அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு அதுவரை கடமையில் இருந்த அனைத்து ஆங்கிலேயர்களும் அப்பெண்ணின் நிலையையும், நல்ல குணத்தையும் கவனத்தில் கொண்டு அவரோடு மிகவும் கண்ணியமாகவும், நட்பாகவும் பழகி வந்தார்கள். கணவன் இல்லை என்ற காரணமோ அல்லது பெண் என்ற காரணமோ அப் பெண்ணுக்கு அதுவரை அங்கு ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தவே இல்லை. 12 வருடங்களின் பின் முதன் முதலாக அங்கு ஒரு திருமணமான தமிழன் வேலைக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பெண் நட்பாகத்தான் அவனைப் பார்த்துச் சிரித்து வைத்தாள். அடுத்த நாளே அந்தத் தமிழன் இடைவேளையின் போது அவள் மேசைக்கு வந்து கதை கொடுத்து கணவன் இல்லாமல்தானே இருக்கிறாய் இரவுகளுக்கு நான் துணையாகிறேன் என்ற கருத்துப் படப் பேசினான். அந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும் அவன் அவளைத் தொந்தரவு செய்வதை நிறுத்தவேயில்லை................ இப்படி நடந்து கொண்டவன் ஆயிரத்தில் ஒரு தமிழன் அல்லது லட்சத்தில் ஒரு தமிழன் என்று நீங்கள் கூறலாம். ஆனால் ஐரோப்பியர்களை விட, கலாச்சாரம் பற்றி வாய்கிழியப் பேசும் எமது தமிழர்களிடம்தான் இந்தப் பண்பு அதிகமாய் உள்ளது.

இது போலத்தான் எனது கதையில் நான் குறிப்பிட்ட பண்பும். ஆண் பெண் மனிதன் என்பதற்கு மேலால் இடத்தோடும் வளத்தோடும் ஒட்டிய பண்பும் நிட்சயமாக ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது.

கறுப்புத்தோல் வெள்ளைத்தோல் என்ற பாகுபாடு வெள்ளையர்களை விட கறுப்பர்களிடம்தான் நிறைய உண்டு. கறுப்புத்தோலுக்கு அவர்கள் தரும் மதிப்பை வெள்ளைத்தோலுக்கு உங்கள் போன்ற எம்மவர்கள் கொடுப்பதில்லை.

இதற்குள் அவர்களுக்குத் துவேசம் என்ற கூற்று வேறு. வெள்ளையர்களின் நல்ல பண்புகளைப் பற்றிப் பேசினாலே மனசு பொறுக்காத எம்மவர்கள்தான் உண்மையில் சரியான துவேசம் பிடித்தவர்கள்.

Donnerstag, April 01, 2004

நிலா முற்றம் - Thivakaran

Wednesday, March 31, 2004
நினைவு நதியில் மனதின் ஜதி - சந்திரவதனா

"எம் வாழ்வில் நடந்து முடிந்து போன சில விடயங்களோ அல்லது நாம் சந்தித்த சில விடயங்களோ அடிக்கடி எமது நினைவுகளுக்குள் வலம் வந்து கொண்டே இருக்கும். அவை சந்தோசமான விடயங்களாக எம்மைக் குதூகலிக்க வைப்பதாகவோ அல்லது மிகத் துயரமான விடயங்களாக எம்மைப் மிகவும் பாதிப்பதாகவோ இருக்கலாம்.
இழப்புகள் எல்லோருக்கும் வருவதுதான். இதில் மனித இழப்புக்கள் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நான் மிகவும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்." என்ற முன்னுரையுடன் தொடங்கும் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் நினைவு நதியில் மனதின் ஜதி என்ற அவரின் கடந்தகால நினைவுகளை அவரின் மனவோசை வலைப்பூவில் படிக்க நேர்ந்தது.

பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஈழத்து தமிழ் எழுத்தாளர்களில் சந்திரவதனா அவர்களின் படைப்புக்கள் என்னை ரொம்பவும் கவர்ந்தவை. நினைவு நதியில் மனதின் ஜதி என்ற அவரின் பால்யகால நினைவுகளை படிக்கும் போது அப்படியே நம்மையும் அறியாமல் நாமும் அந்த காலகட்டத்துக்குள் சென்றுவிடுகின்றோம்.

பொதுவாகவே எல்லோரது மனங்களிலும் அவர்களின் கடந்தகால நினைவுகள் என்றும் பசுமையாக மனதில் ஒடிக் கொண்டிருக்கும். அதே போல சந்திரவதனா அவர்கள் 3 வயதில் சந்தித்த முதல் மரணம் பற்றியும் சின்ன வயதில் விளையாடிய "இவடம் எவடம்" விளையாட்டு பற்றியும் அப்படியே பசுமை குறையாமல் தந்திருக்கின்றார். அவரின் படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்.

# posted by thiva @ 3/31/2004 05:18:26 PM

Montag, März 29, 2004

பிரபு ராஜதுரை-March 28, 2004

விதி தன்னை படைக்கட்டும்!

வணக்கம்,

தொண்ணூறுகளின் இறுதியிலும் பின்னரும் இந்தியாவில் மென்பொருள் தொழில் அசுர வளர்ச்சியடைந்ததற்கு காரணம், 'மென்பொருள் தொழில் வளர்ச்சிக்கென நம் அரசிடம் ஒரு அமைச்சகம் இல்லை' என்று பிரமோத் மஹாஜன் வேடிக்கையாக குறிப்பிடுவார். எனினும் அதில் ஒரு உண்மை இருக்கிறது. அது போலவே வலைப்பதிவென்பது இதுதான், என்று கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு பலரும் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுத்து...வலைப்பூக்கள் இத்தனை வளர்ச்சியடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி!

முதலில் முட்டை முழுதாக உடைந்து கோழிக்குஞ்சு வெளிவரட்டும். பின்னர் அதன் தன்மை அறிந்து பெயர் வைக்கலாம். அது போலவே, பலரும் பல கோணங்களில் இவற்றை பயன்படுத்தட்டும். வெல்பவை விதியாக தன்னாலாயே மாறும். பலரின் பாராட்டினையும் பெற்ற பத்ரியின் 'எண்ணங்கள்' அவ்விதமான சில விதிகளை படைக்கும் என்பது என் அனுமானம். அவை எளிமை மற்றும் நிலைத்தன்மை. தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், பத்ரி நல்ல ஒரு திட்டமிடலுடனும், தெளிவான ஒரு நோக்கத்துடனும் தனது வலைப்பதிவினை முன்னெடுத்துச் செல்வதாக என்னால் கூற முடியும். மேலும், பத்ரி 'தனது வலைப்பதிவானது வழக்கமாக இணையத்தில் வலம் வரும் நடுத்தர, மேல் நடுத்தர இளைஞர் பட்டாளத்தைக் கடந்து விரைவில் ஏற்படவிருக்கும் இணையத் தொடர்புப் புரட்சியின் துணை கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் சாதாரண மக்களைச் சென்றடைந்து....இதன் மூலம் ஒரு சமூக, அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு பொதுக்கருத்தினை உருவாக்கும் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவராக தெரிகிறார். அதற்குத் தேவை நல்ல தமிழ். தோற்றத்தில் எளிமை. நிலைத்த தன்மை. நிலைத்த தன்மை என்பது தொடர்ந்து அங்கு பதியப்படும் பதிவுகள் அனைத்துமே
பெரும்பாலும்...நான் கூறிய அந்த நோக்கத்தினை நோக்கிய செயல்பாடுகளாகவே இருப்பது.

இவ்வகையான நிலைத்த தன்மைக்காக பலர் மெனக்கெடுவது புரிகிறது. இதன் காரணமாகவே, ஒருவரே பல வலைப்பதிவுகளை வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு வலைப்பதிவினையே இதோ என்னைக் கவர்ந்த பெண்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நம்மையெல்லாம் கிடப்பில் போட்டுச் சென்ற நம்ம பாலாஜி பாரிபோன்றவர்கள் இருக்கையில், மூன்று நான்கு
வலைப்பதிவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? (பாரியின் உறுமி மேளம் மறுபடி உறுமத்
தொடங்கி விட்டது. தனது மதிப்பிற்குறிய கோமதி டீச்சரைப் பற்றி ஆரம்பித்தவர், ஆரம்பித்த
வேகத்திலேயே தொடரும் போட்டிருக்கிறார்)

இவ்விதமான மல்ட்டி டைமன்ஷனல் வலைப்பதிவுகளில் ஏழு பதிவுகளுடன் முதலிடத்தில் இருப்பவர்
சந்திரவதனா. 'படித்தவை' என்று ஒரு பதிவிருப்பதால் அவரது பதிவுகளில் எதைப் பற்றி எழுதுவது என்பதில் சிரமமிருக்கவில்லை. முள்ளுக்கம்பிகளுக்கு பின்னே மகனை அணைத்தபடி இருக்கும் ஈராக் போர்க்கைதியின் படம் உள்ளத்தை உருக்குகிறது. ஆனாலும் பெரும்பாலோனார் ஏற்கனவே இப்படத்தை பார்த்திருக்கலாம். பெண்ணென்று பூமிதனில் என்று ஒரு சுட்டி! சொடுக்கினால் மு.பொன்னம்பலன் என்பவரின் வலைப்பதிவில் பதிந்துள்ள அமிர்தானந்தமாயி அம்மாவின் உரை! புதிதாக அந்த உரையில் ஏதும் கூறியிருப்பதாக தெரியவில்லை. அடுத்து முஸ்லீம் சமூகத்தினை சேர்ந்த ஜுனைதா பேகம் என்ற எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை.... ஆச்சரியமான தகவல்கள். முக்கியமானது பெரும் புகழ் பெற்ற எழுத்தாளரான இவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரைதானாம்.

பின்னர் சில புகைப்படங்கள் இருக்கின்றன. புகைப்படக்காரர் சந்திரவதனா இல்லை என்பது புரிகிறது. ஆனாலும், ஏன் இப்படங்கள் இவரை பாதித்தது, அல்லது ஏன் இவர் இவற்றை ரசித்தார் என்று மனதை சற்று திறந்து வைத்திருந்தாரானால்.....வலைப்பதிவு மேலும் அர்த்தமுள்ளதாயிருந்திருக்கும்.

"ஆர்கைவ்" கிடங்கின் இடையே தோண்டினால் திறந்த பக்கத்தில் சிறுமியின் சிறுநீரக அறுவைச்
சிகிச்சைக்காக பண உதவி வேண்டும் புகைப்படத்துடன் அறிவிப்பு. சிறுமிக்கு வேண்டிய உதவி இதற்குள் கிடைத்திருக்கட்டும். நடுத்தர் குடும்பத்தை சேர்ந்த பலர் இன்னமும் இறந்தகாலத்திலேயே இருக்கிறார்கள். ஒரு சாதாரண இரத்த சோதனைக்கே ஆயிரம் ரூபாய் வரை மும்பையில் கேட்கிறார்கள். எந்த ஒரு அறுவை சிகிச்சையானாலும் சாதாரணமாக ஐம்பதாயிரம் ஆகிறது. இனி மருத்துவ காப்பீடு செய்து கொள்வது இங்கும் வளர்ந்த நாடுகளைப் போல அவசியம் என்பதை நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்களே உணர மறுக்கிறார்கள். வருடம் சுமார் ஐயாயிரம் ரூபாய் போனால் போகிறது....மருத்துவ செலவு என்று வந்தால் யாரிடமும் சென்று நிற்க வேண்டாம் என்ற மன நிம்மதிக்காக இந்த விலையை கொடுப்பதில் தவறில்லை.

நான் சிறுவனாக இருக்கையில் தனியார் மருத்துவ மனைகளில் 'இது சிக்கலான கேஸ். நீங்க
பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்க' என்று கூறுவார்கள். பெரிய ஆஸ்பத்திரி என்பது அரசு மருத்துவமனைகள். நான் வீட்டிலும் எனது தங்கை அரசு மருத்துவமனையிலும் பிறந்தோம். இப்போது அரசு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்வதை நினைத்துப் பார்க்க இயலுமா? நமது பொருளாதார நிலை உயர்ந்து விட்டது என்பதை விட அரசு மருத்துவமனைகளின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்பதுதான் காரணம். 7000 கோடி ரூபாய்க்கு ஒரு பொம்மைக் கப்பலை வாங்க ஏழை மக்கள் கொடுக்கும்
விலை, மருத்துவ வசதியின்மை!!!

வருமான வரி கட்டுபவர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு கொடுக்கிறார்கள். ஆனால், இவ்வாறான மருத்துவ உதவி தேவைப்படும் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு அறையாவது கொடுக்கலாம் அல்லவா? வருமான வரி கட்டவும் பலர் முன் வரலாம். ஹ¥ம்....

அன்புடன்

பிரபு ராஜதுரை

Freitag, März 19, 2004

சங்கடப்படுத்திய சிறுகதை

நாம் எத்தனையோ விடயங்களுக்காகக் கலங்குகிறோம். கண்ணீர் வடிக்கிறோம். ஆனால் வழமை போலப் பேச்சாகவோ, வெறும் செய்தியாகவோ இல்லாது மரணம் என்ற ஒன்று நியமாகவே எம் வாழ்வில் குறுக்கிடும் போதுதான் நாம் இத்தனை காலமும் அர்த்தமின்றி அநாவசியத்துக்குக் கண்ணீர் வடித்தோம் என்பதைப் புர்஢ந்து கொள்கிறோம். வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த வலியில் துவண்டு போகிறோம்.

அதி உச்ச மனவலியைத் தரக் கூடிய வலிமை இந்த மரணம் என்ற கொடிய நிகழ்வுக்கு உண்டு. இந்தத் திணறல்கள் கதையும் அப்படியான ஒரு உச்ச வலியைச் சொல்ல முனைகிறது. சொல்லாது விட்ட, செய்யாது விட்ட விடயங்களை பி஡஢ய உறவொன்றின் மரணத்தின் பின் நினைந்து நினைந்து ஆதங்கப்படும் மனதின் ரணத்தை - அன்று இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். நான் தப்புச் செய்து விட்டேன்.. ஖ என்பது போன்றதான ஒரு சில வா஢கள் எடுத்துக் காட்டுகின்றன. வாசிக்கத் தொடங்கிய பின் நிறுத்த மனமில்லாது கதையோடு மனசு ஓடுகிறது. என்ன நடந்து விட்டது? இறந்து விட்டாளா..? இறந்து விட்டாளா என முடிவை அறிய மனசு அவசரப் படுகிறது. இருந்தாலும் அவசரப் படாது எழுத்தோடு பயணித்து முடியுந் தறுவாயில் அது ஒரு உண்மைக் கதை என்பது தொ஢ந்த போது மிகவும் சங்கடமாகி விட்டது.

சந்திரவதனா

யேர்மனி
Quelle - http://www.thisaigal.com/sep03/uniletters.html

Sonntag, März 14, 2004

வாருங்கள் வாருங்கள்

வாருங்கள் வாருங்கள்

நண்பர்களே,

வணக்கம்!

கடந்த எட்டுமாதங்களாக எதிர்பார்த்ததையும்விட உங்களனைவரின் ஆதரவோடும், அரவணைப்போடும் இந்த வலைப்பதிவு நடந்து வந்தது. இந்த வலைப்பதிவை ஆரம்பித்தபோது இத்தனை பெரிதாக வளரும் என்றோ, இவ்வளவு நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்றோ நினைக்கவில்லை. தொடக்க நாட்களில் தமிழில் எப்படி எழுதுவது, யூனிகோடில் எப்படி எழுதுவது என்பதே சிக்கலாக இருந்தது. இந்த எட்டுமாதங்களில் பற்பல மாற்றங்களை தமிழ்வலைப்பதிவாளர்களோடு இந்த வலைப்பதிவும் எதிர்கொண்டது.

வலைப்பூவில் ஆசிரியர்களாக வந்து தொடக்கி வைத்து ஒத்துழைத்த சந்திரவதனா, மீனாக்ஸ், பரி ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும்.

இதுவரை ஆசிரியராக இருந்தவர்கள்

1. 09/21 - 09/27: சந்திரவதனா
2. 09/28 - 10/04: மீனாக்ஸ்
3. 10/05 - 10/11: பரிமேலழகர்
4. 10/12 - 10/18: சுபா
5. 10/19 - 10/25: காசி ஆறுமுகம்
6. 10/26 - 11/01: வெங்கட்ரமணி
7. 11/02 - 11/08: கிருபாஷங்கர்
8. 11/09 - 11/15: வினோபா கார்த்திக்
9. 11/16 - 11/22: ராமச்சந்திரன் உஷா
10. 11/23 - 11/29: நவன்
11. 11/30 - 12/06: டாக்டர் நா.கண்ணன்
12. 12/07 - 12/13: பாஸ்டன் பாலாஜி
13. 12/14 - 12/20: எம்.கே.குமார்
14. 12/21 - 12/27: ரவியா
15. 12/28 - 01/03: பவித்ரா
16. 01/04 - 01/10: சித்தார்த் வெங்கடேஷ்
17. 01/11 - 01/17: ஹரன் பிரசன்னா
18. 01/18 - 01/24: சங்கர்
19. 01/25 - 01/31: கார்த்திக்ராமாஸ்
20. 02/01 - 02/07: பத்ரி சேஷாத்ரி
21. 02/08 - 02/14: பாலாஜி பாரி
22. 02/15 - 02/21: 'ஐகாரஸ்' பிரகாஷ்
23. 02/22 - 03/07 முத்து
24. 03/08 - 03/13 அருணா ஸ்ரினிவாசன்

மேலே இருக்கும் பட்டியலை தமது வலைப்பதிவில் வெளியிட்டு கூடியசீக்கிரம் வலைப்பூவில் இருபத்தைந்தாவது ஆசிரியர் வரப்போகிறார் என்று அறியத்தந்தவர் நமது பாபா. நன்றி பாலாஜி.

நாளைக்கு யார் ஆசிரியராக வரப்போகிறார்கள்? அனைவரும் ஆவலாகக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதை நாளைக்கு காசி சொல்வார்.

இப்ப நீ இன்னாத்துக்குமே வந்துகீறே'னு கேக்குறீங்களா?

நாளையில் இருந்து வலைப்பூ வேறிடத்தில் வெளிவர இருக்கிறது.

http://valaippoo.yarl.net

மூவபிள் டைப்பை தமிழ் வலைப்பதிவாளர்கள் இலவசமாக வழங்கும் சுரதாவிற்கு நன்றி.

இப்போதிருக்கும் ப்ளாக்ஸ்பாட்டை விட மூவபிள் டைப் வலைப்பதிவு மிகவும் சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். புது இடத்தில் ஏதேனும் அசௌரியங்கள் இருந்தால் தெரிவியுங்கள்.

நன்றி.

அன்புடன்,
மதி

அனுப்பியவர் mathy
காலம் March 14, 2004 12:26 PM

Montag, März 01, 2004

(Feb 22 - 28) - முத்து

மருத்துவச் செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கும் சந்திரவதனா, பல வலைப்பூக்கள் வைத்திருப்பதலோ என்னவோ இங்கு அடிக்கடி எழுதுவதில்லை.

முத்து
posted :Sunday, February 29, 2004 : 17:38

--------------------------------------------------------
மறுமொழி
--------------------------------------------------------
Chandravathanaa (http://manaosai.blogspot.com) @ 02/29/2004 15:02:
முத்து

இங்கு வந்து எழுதுவது குறைவானாலும் தினமும் தவறாது இப்பக்கத்தைத் தரிசிக்கிறேன்.
முடிந்தவரை ஒவ்வொரு வலைப்பூவையும் நுகர்கிறேன்.

நீங்கள் எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா
--------------------------------------------------------
மறுமொழி
--------------------------------------------------------
suratha (http:/aayutham.blogspot.com) @ 03/01/2004 01:26:
குடிலின் பன்முகம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.நாட்குறிப்பாக எழுதத்தொடங்குவதாலேயே இந்த தேக்கம் ஏற்படுகிறது என எண்ணுகிறேன். .
காசியின் தொழில்நுடப விரிவாக்க சமாச்சாரங்கள் தனியாக பதியப்படவேண்டும்.சங்கரின் டிகிற்றால் கமரா பற்றிய செய்தியும் உள்ளிட்டால் இலத்திரனியல் சாதனங்கள் பறற்றிய ஒரு தொகுப்பாக அமையும்.
தமிழுக்கும் வலைமுகம் ஏறுமுகமாக அமையும்.
பத்ரி,பாலாஜி,ச.வதனா போன்றவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.மற்றையோர் தொழுதுண்டு பின் செல்வோம்.

Mittwoch, Februar 18, 2004

ரவியா 21.12.2003 - 27.12.2003

Thursday, December 25, 2003

ஒரு அழகான கவிதை. என்னுது இல்ல..காப்பி அடிச்சதுத்தான். அந்த கவிதையை சொல்லிட்டு செய்தி வாசிப்பவர்கள் மாதிரி by the way சொல்லி நம்ம சந்திரவதனா க்கு வரலாம் என்றிருந்தேன். ஏழு வலைப்பூக்கள் எப்படித்தான் பராமரிக்கிறார்களோ ?

(உங்கள் பேரக் குழந்தை நல்ல வடிவு (புரியுதா உஷா) சந்திரா.)

அது மட்டும்மிலாமல் இந்த இடத்தில் கதைக் கதையாய் கதைக்கிறார். கணேஸ் மாமா வுடன் பருத்தித்துறை தோசைக்கு சாப்பிடாமலே நான் அடிமை. அவ்வளவு ருசியா சந்திரவதனா ?
சாப்பிட்டவுடன் சூடாக ஒரு 'றீ' குடித்தால் எப்படியிருக்கும்?
மதியுடன் சூள் கொட்டுன்ன மாதிரி இவர்க்கதைகளில் சப்பு (slurp slurp )கொட்டலாம்.

அவரின் பொட்டு கிளாஸ் கதையை படித்திருக்கிறீர்களா ? என்னை மிகவும் பாதித்த கதை. இலங்கையிலும் சாதி வேற்றுமையிருக்கும் என்று எனக்கு தேரியாது. அருமையான் கதை ! சினிமா இயக்கினர்கள் இரண்டு விரல்களை lens போல் பாவித்து angle பார்ப்பார்களே அதுப்போல் திரைப்பட (குறும் படம்) மாகவே ( கிரேன் ஷாட் உள்பட) படித்தேன். இல்லை பார்த்தேன்.

விமர்சன பகுதியிலும் எழுதியுள்ளேன். கதையை படித்து (பார்த்து) விட்டு படியுங்கள்.

கடைசி ஷாட்பா..

எல்லாம் ரெடியா பி.சி ?( நம்ம P.C SriRam தான்)

இந்த கிளாஸை Close-up ல காட்டி அப்படியே Blur அல்லது Fade out பண்ணி Zoom out பண்ணிங்கனா A film by Raviaa போட்டு அப்படியே ..Final Credits போட்டுலாம்...

ரவியா?? : மூலக் கதை சந்திரவதனா என்று கட்டாயம் போடனுமா ரவியா!! ?

(இன்னுமா தூக்கம்...ஏந்திரி ஏந்திரி... சரியான் துங்கு மூஞ்சி)

உங்கள் ரவியா

-------------------------------------------------------------------------------------
மறுமொழி

பெயரிலி () @ 12/24/2003 12:04:
ஏமண்டி விருமாண்டி ஒரு ஸாங்கு மட்டும் ஜோராண்டி. ஒன்னைவெட இந்த் ஒலகத்தில் எனக்கென்று யாருமில்ல (சரிகாம்மாவும் பூட்டுது சிம்ரன் கட்டிக்கிட்டுது கௌதமி என்னாச்சுதுபா?) சந்திரவதனா அக்கா இலங்க ரமணி சந்திரன் லச்சுமி ஸடெப்ப கடந்து சிவசங்கரி இந்துமதி வாஸந்தி பார்ட்டி அந்த ரேஞ்சுக்குமேல அம்ப ராசம் கிருச்ணன் மாதிரில்லாம் எயுத மாதிரி தெர்யல்ல. புலி ·பைட்டர் அப்த்தி எழுதுறதுமட்டும் கொஞ்சம் டிபெரண்டா காட்டுது. அம்புட்டுத்தேன்.

Mittwoch, Februar 11, 2004

(Feb 08 - 15) - பாலாஜி-பாரி

Wednesday, February 11, 2004
புதிய பதிவுகள் -2


சந்திரவதனாவின் சுதந்திரம் பற்றிய கவிதையில் தெரியும் உண்மை அதிரச் செய்கின்றது. அவர் காட்டியுள்ள சுட்டியில் திரு. கண்ணன் அவர்களால் இடப்பட்ட "காதலா? கடமையா?" நாவல் எழுதிய சித்தி என்ற ஆச்சிம்மா பற்றிய குறிப்பு உள்ளது. இதை அனைவரும் பார்க்கவும். மூன்று வகுப்பு மட்டுமே படித்த இந்த முதிய பெண்மணி பலரின் மனதில் நம்பிக்கைகளை தோற்றுவிப்பார் என நம்புகின்றேன். அட! இவர் நாகூர் ரூமியின் உறவாமே!! :-) சந்திரவதனாவின் மாவீரர்கள் வீரப் பூவும் முக்கியமானது. இவரது இரசனையை இரசிக்க படித்தவை...குறிப்பாக எழில்நிலா கவிதை. மிக இயல்பாக, சூரிய ஒளியில் பளீரிட்டு அமைதியாய் இருக்கும் பூ போல இருக்கின்றது. தொல்கால சுடு மண் சிற்பங்கள் பற்றி இங்கே காண்க. இது அந்த பகுதியின் தொல் பொருள் ஆர்வத்தை தூண்டுகின்றது.

-பாரி
posted by Editor : 16:56

(Feb 08 - 15) - பாலாஜி-பாரி

புதிய பதிவுகள்

சந்திரவதனாவின் ஓர் சிறப்பான முயற்சி..... கவிஞர் தீட்சண்யனின் கவிதைகளை இங்கே பதிகின்றார். கருத்தாழமிக்க வார்த்தை ஜாலங்கள்.

posted by Editor : 14:57

(Dec 14 - 20) - எம்.கே.குமார்.

தீட்சண்யன் கவிதைகளில் நெருப்பு பறக்கிறது. காலமாகிவிட்ட அவரது கனவு பலிக்க வேண்டுவோம்.
எம்.கே.குமார்.

# posted by Editor : 10:38
(Dec 14 - 20) - எம்.கே.குமார்.