Sonntag, September 10, 2006

யேர்மனியில் - சாவிலும் வாழ்வோம்

வெள்ளி 25-08-2006 17:33 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

யேர்மனியில் எழுச்சியுடன் 5வது நாட்களாக சாவிலும் வாழ்வோம் போராட்டம் முன்னெடுப்பு.

யேர்மனியில் இன்று 5வது நாட்களாக சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்டம் ஸ்பயா மாநிலத்தில் உள்ள மன்கைம் நகரில் முன்னெடுக்கப்பட்டது.



தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழர் ஓருங்கிணைப்புக்குழுவின் குறுன்ஸ்ரட் பிரதிநிதி சுவேந்திரன் ஏற்றிவைத்தார்.



அதனை தொடர்ந்து பொது சுடர்களை 3 மாவீரர்களின் தாயார் திருமதி சிவா தியாகராஜா,தென்மேற்கு மாநிலத்தின் தமிழ்கல்விகழக பொறுப்பாளர் திரு.சிவகுமார், தமிழர் ஓருங்கிணைப்புக்குழுவின் கைடல்பேக் பிரதிநிதி ஞானகிருஸ்ணன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.




100க்கு மேற்பட்ட தமிழீழ மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் யேர்மனிய மக்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினைகளை விளக்கும் விதத்தில் ஸ்பையர் மாநில கலைபண்பாட்டு கழகத்தினரால் டொட்மொழியில் பாடல் தயாரிக்கப்பட்டு யேர்மனிய மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டது.




இந் நிகழ்வு நடைபெற்ற போது பெரும் எண்ணிக்கையில் யேர்மனிய மக்கள் நின்று அவதானித்தனர்.அத்துடன் துண்டுப்பிரசுரங்களும் யேர்மனிய மக்களிற்கு விநியோகிக்கப்பட்டதுடன் எமது பாரம்பரிய நடனங்கள், தெருக்கூத்துக்கள் என்பன நிகழ்த்தப்பட்டன.




நாளைய தினம் பிராங்போட் நகரில் காலை 9மணிமுதல் மாலை 5மணி வரை சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Quelle - Pathivu