Dienstag, Dezember 23, 2008

ஆற்றாமைப் பொழுதுகளை தனது எழுத்துக்களால் தேற்றும் சந்திரவதனா

- Dr.எம்.கே.முருகானந்தன் -

உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.

சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.

மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும். ஆனால் பெரும்பாலும் மனங்கள் உயிர்ப்பின்றி வெறுமனே வாழாதிருந்து விடுவதில்லை. அவை அன்பில் நெகிழ்கின்றன. துன்பத்தில் கலங்குகின்றன. கலாசார சீரழிவுகளைக் கண்டு மனம் குமுறுகின்றன. பண்பான செயல் கண்டு பெருமிதம் அடைகின்றன. அநீதியைக் கண்டு பொருமுகின்றன. அக்கிரமத்தைக் கண்டு பொங்கி எழுகின்றன.

ஆனால் ஒரு சிலரே தமது அனுபவங்களை படைப்பின் ஊடாகப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரவதனாவும் அத்தகையவர்தான். 'எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத பொழுதுகளை எனது எழுத்துகளாற்றான் தேற்றியிருக்கிறேன்.' என அவரே தனது முன்னுரையில் சொல்கிறார். துன்பங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் அதன் சுமையைக் குறைக்கிறார். மகிழ்ச்சியான கணங்களை பிட்டுத் தருகிறார்.

சந்திரவதனாவின் படைப்புலகம் எளிமையானது, அதன் நிகழ்வுகள் வாழ்வோடு ஒன்றியது. நாளந்தம் தம் வாழ்வில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் அவரின் மனத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை கற்பனை மெருகூட்டாது, அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, நாகொல்லாகம், வவுனியா, மொஸ்கோ, ஜேர்மன், லண்டன், கனடா எனப் பயணப்பட்டுத் தேடப்பட்டு அவரது ஆழ்மனத்தில் உறைந்திருந்து மீட்கப்பட்ட புதையல்கள்தான் 'மனஓசை' என்ற சிறுகதைத் தொகுப்பு.

அங்கெல்லாம் சந்திக்கும் மக்களது, முக்கியமாக தமிழர் வாழ்வினைப் பதிவு செய்கிறது. ஆய்வாளனாக, சமூகவியலாளனாக, விஞ்ஞானியாக மனிதவாழ்வை சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கி பிய்த்துப் பார்க்கும் பார்வை அல்ல. ஒரு குடும்பப் பெண்ணின் பார்வை இது. அவளின் உள்ளுர் வாழ்வின் நினைவுகளையும், அதன் எதிர்மறையான புலம்பெயர் வாழ்வின் கோலங்களையும் தெளித்துச் செல்கிறது.

ஆத்தியடி வீட்டில் இருக்கும் பிச்சிப் பூவின் மணத்தில் கிறங்கும் அதே மனம் ஜேர்மனியின் பனியில் உறைந்த மரங்களிலும் லயிக்கிறது.

'காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் இருந்த காசல் நட்ஸ் மரம்';. பின்னர் 'இலைகள் மஞ்சளாகி ... இலைகளே இல்லாமல் மொட்டையாகி,' பின் 'பனியால் மூடப்பட்டு ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து பரந்து அழகாக....' என்கிறர் ஓரிடத்தில்.

ஆம் அவருக்கு வாழ்வை ரசிக்கத் தெரிகிறது. மனசு பூரித்து போதையாக நிறைந்து வழிகிற நேரங்களில் மட்டுமின்றி மனசுக்குள் சோகம் சுமையாக அழுத்தி துயர் சொரியக் கரையும் கணங்களிலும் கூட இயற்கையின் மேலான வாஞ்சையை, மனித உறவுகள் மீதான அக்கறையையும் பரிவையும் அவரில் காண முடிகிறது. இந்த வாலாயம் அனைவருக்கும் கை கூடுவது அல்ல.

யாழ்ப்பாணச் சமூகம் எவ்வளவு தூரம் தாங்க முடியாத சுமைகளையும் சுமந்த போதும் அவ்வளவு தூரம் அதிலிருந்து மீண்டு வாழவும் செய்கிறது.

தந்தையை இழந்தவர் எத்தனை பேர்?

தாயை, சகோதரங்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை என எவர் ஒருவரையாவது இழக்காதவர் அம் மண்ணில் இருக்கிறார்களா?.

அங்கங்களை இழத்தல், வீட்டை இழத்தல், தொழில் இழத்தல் என மற்றொரு பக்கம்.

அதற்கு மேலாக தமது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்போது? தாய் மண்ணிலிருந்து பிரிந்தேனும் புதுவாழ்வு பெற விழைகிறது.

அதற்காக அச் சமூகம் கொடுத்த, கொடுக்கிற விலை என்ன? 'சொல்லிச் சென்றவள்' சிறுகதை முதல் சந்திராவின் அனுபங்களாக விரியும் பக்கங்களுக்கு ஊடாக பயணப்படும்போது அந்தத் துயரங்களில் மூழ்கித் திணறும் நிலை ஒவ்வொரு வாசகனுக்கும் ஏற்படவே செய்யும்.

காதல் கல்யாணமே இன்றைய யதார்த்தம்.
உலகம் அதற்கு மேலும் சென்று விட்டது.

கல்யாணமின்றி சேர்ந்து வாழ்வதும், திருமணமாகாமலே குழந்தைகள் பெறுவதும், விரும்பங்கள் மாறினால் கட்டியவனை அல்லது கட்டியவளை பிரிந்து செல்வதும், ஒற்றைப் பெற்றாருடன் குழந்தைகள் வாழ்வதும் இன்று மேலைத் தேச வாழ்வுக்கு அன்னியமான செயற்பாடுகள் அல்ல.

இவ்வாறு இருக்கையில் 'புகைப்படத்தைப் பார்த்துவிட்டு எங்கோ வாழும் ஒருவனுக்கு மனைவியாவதற்கு தயாராவதும், ..... கண்ணாலே காணதவனை நம்பி வெளிநாட்டுக்கு ஏறிப் போக அங்கு அவன் சட்டப்படி கலியாணம் செய்யாது அல்லாட வைப்பதும், திருப்பி அனுப்ப முனைய அவள் நிரக்கதியாவதும் இப்படி எத்தனையோ அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறார்.

'பாதை எங்கே', 'விழிப்பு', 'வேசங்கள்', போன்றவை அத்தகைய படைப்புகள்.

'புலம் பெயர் வாழ்வின் பெண்கள் சார்ந்த அவலங்களை இவ்வளவு ஆழமாகப் பதிவு யாரும் பதிவு செய்யவில்லை' என்ற கருத்துப்பட இராஜன் முருகவேள் கூறியிருப்பதுடன் நானும் ஓம் படுகிறேன்.

அதே நேரத்தில் புலம் பெயர் வாழ்வின் இன்னொரு பக்கமாக, 'தீரக்கதரிசனம்' கதையில் வரும் ஒரு வயதான பாட்டாவின் வாழ்வில் மூழ்கும்போது எம் மனமும் கனடாவின் பனிபோல உறைந்து விடுகிறது.

'தாங்கள் காலமை வேலைக்குப் போற பொழுது தகப்பனை வெளியிலை விட்டு கதவைப் பூட்டிப் போட்டு போயிடுவினம்' மத்தியானம் சாப்பிடுறது, ரொயிலட்றுக்கு போறது எல்லாம் அவர்கள் வந்தாப் போலைதானாம்.

வீதியோரக் கல்லில் பனியில் உறைந்து, பசியில் துவண்டு, பேசுவதற்கும் ஆள் இன்றி ஒரு பிச்சைக்காரனைப் போல பரிதாபமாக அமர்ந்திருந்த யாரோ ஒரு பாட்டாவைப் பற்றிய தகவல் இது.

'அப்ப அவர் ஏன் இங்கை இருக்கிறார். நாட்டுக்குப் போகலாம்தானே' கதாசிரியர், கூட வந்த பிள்ளையிடம் கேட்கிறார்.

'அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகிதில்லோ'.

'சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பதாக' கதாசிரியர் கூறுகிறார்.

'வீட்டு காவல் நாய்கள் போல இருக்கிறம்' என அவுஸ்திரேலியா சென்ற ஒரு முதியவர் என்னிடம் முன்னொரு போது கூறியபோது மனம் வருந்தினேன்.

இவை யாவும் வெறும் கொடுமை அல்ல. பணத்தின் முன், சொகுசு வாழ்க்கைக்கு முன் மனித உணர்வுகளே இவர்களுக்கு மரணித்துவிட்டதன் வெளிப்பாடு.

நெஞ்சை உலுக்கும் நிலை இது.

பெண்ணியம் அவரது படைப்புகளில் கருத்துநிலை வாதமாகத் துருத்திக் கொண்டு நிற்பதில்லை. முக்கியமாக ஜேர்மனி நாட்டில் சில தமிழ்ப் பெண்கள் படும் அவலங்களை மிகவும் யாதார்த்தமாகச் சித்தரித்துள்ளார்.

'தாலியை நிதானமாகக் கழற்றி வைக்கும்' 'விலங்குடைப்போம்' கதையின் சங்கவி,

'என்னோடை ஒரு நாள் கோப்பி குடிக்க வருவியோ' என்ற கேள்வியோடு அதற்கு மேலானா சம்மதத்தைத் தேடும் ஆபிரிக்காரனை உறுதியோடு மறுக்கும் 'பயணம்' கதையின் கோகிலா ஆகியோர் சற்றுத் துணிச்சல்காரர்கள்.

ஆனால் அதே நேரம் 'என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?', 'ஏன்தான் பெண்ணாய்' போன்ற கதைகளில் வரும் பெண்கள் சாந்தமானவர்கள்.

குடும்ப வாழ்வில் தாம் தினசரி அடக்கப்பட்போதும் அதிலிருந்து வெளி வராமல் பொறுத்துக் கொள்ளும் பேதைகள். தங்களை மட்டும் யோசிக்காது குழந்தைகளையும் குடும்பத்தையும் நினைத்துப் அடங்கிப் போகும் அப்பாவிகள்.

உண்மையில் இது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதுதான்.

கதைகளைப் படித்துவிட்டு உங்கள் வீட்டையும் சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

'டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து ...' என ஆரம்பிக்கும் இந் நூலின் தலைப்புக் கதையான பொட்டு கிளாஸ் சாதீயம் பற்றியது. தாழ்த்ப்பட்ட சாதியினர் மீதான உயர்சாதிப் பெண்ணின் பரிவை எடுத்துச் சொல்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன், மற்றும் அவரது சகோதரி சந்திரா ரவீந்திரன் ஆகியோரை 80களின் ஆரம்பத்திலிருந்து அறிந்திருக்கிறேன். இவரது உலகின் ஒரு பகுதி எனது உலகமும் கூட.

அவரது வீடு எனது பருத்தித்துறை டிஸ்பென்சரியிலிருந்து எனது சொந்த ஊரான வியாபாரிமூலைக்கு போகும் பாதையில் இருக்கிறது.

அவரது படைப்புகளில் வரும் பாத்திரங்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் எனக்கும் பழக்கமானவர்களே.

ஏனைய பல பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர்களே.

பல நிகழ்வுகளும் எனக்கும் அன்னியமானவை அல்ல.

இதனால் இவரது இந்த நூலைப் படிக்கும்போது அக் காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை மீள அசைபோடும் வாய்ப்பு கிட்டியது.

ஆத்தியடி பிள்ளையார் கோவில், நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில்.இவ்வாறு எவ்வளவோ!

நினைக்கும்போது எவ்வாறு எமது வாழ்வு சிதைந்து விட்டது. வாலறுந்த பட்டமாக, வேரறுந்த மரமாக அல்லாடுகிறோம் என்பது மனத்தை உறுத்துகிறது.

அவரது 'மன ஓசை' என்னையும் அல்லற்படுத்துகிறது.

யாழ் மண்ணோடு உறவு கொண்ட அனைவரையும் அவ்வாறே அல்லற்படுத்தும் என்பது நிச்சயம்.

சந்திரவதனா செல்வகுமாரன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமானவர். பல இணைய இதழ்களில் அவரது பல படைப்புகள் வெளியாகின்றன. தனக்கென பல வலைப்பதிவுகளையும் வைத்திருக்கிறார்.

மேலும் பிரகாசமான படைப்புலகம் அவர் பேனாவிலிருந்து ஊற்றெடுக்கக் காத்திருக்கிறது எனலாம்.

முப்பது கதைகளை அடக்கி 195 பக்கங்கள் நீளும் இத் தொகுப்பை குமரன் பிரின்ரேர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.

எம்.கே.முருகானந்தன்

நன்றி:- தினக்குரல்- 14.12.2008
நன்றி:- எம்.கே.முருகானந்தன்

Mittwoch, Februar 20, 2008

சந்திரவதனா செல்வகுமாரனின் 'மனஓசை'!

பதிவுகளில்



இணையத்தின் வாயிலாக நன்கறியப்பட்ட பெண் படைப்பாளிகளில் சந்திரா செல்வகுமாரனும்
முக்கியமானவர்களிலொருவர். இவர் பருத்தித் துறையிலுள்ள ஆத்தியடி கிராமத்தைச்
சேர்ந்தவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றவர். 1975இலிருந்து
எழுதிவரும் இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் தீனி போட்டது இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனமே. அன்றிலிருந்து எழுதிவரும் இவரது பன்முகப்பட்ட படைப்புகள்
வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பலவற்றில்
வெளிவந்துள்ளன. இவரது 'மனஓசை' வலைப்பதிவு இவரது சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகளின் வெளிப்பாடாக விரிந்து கிடக்குமொரு தளம். சிறுகதை, கவிதை, கட்டுரையென இவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி நிற்பன இவரது ஆக்கங்கள். இவரது சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது சிறுகதைகளின் தொகுப்பு 'மனஓசை' என்னும் பெயரில் நூலாகவெளிவந்துள்ளது. இச்சிறுகதைத் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டில் இணையத்தில் வெளியிடப்பட்டதை இணைய வாசகர்கள் அறிந்திருக்கலாம். அந்நூலின் முன்னுரையில் அவர் பின்வருமாறு கூறும் வார்த்தைகளுடன் அவரது நூலினைப் பதிவுகள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றோம். அத்துடன் அவரது 'வேஷங்கள்' என்னும் சிறுகதையினையும் அவரது வலைப்பதிவிலிருந்து பிரசுரிக்கின்றோம்.

சில வார்த்தைகள்.....



- சந்திரவதனா செல்வகுமாரன் -

சந்திரவதனா செல்வகுமாரன் -என்
பெற்றோர்கள் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு
மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும்
பிடிக்கிறது. நான் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சில துளிகளையே
உங்களிடம் தருகிறேன். எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத ஆற்றாமைப் பொழுதுகளை எனது
எழுத்துக்களாற்றான் நான் தேற்றியிருக்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்கே என்றிருக்கும்
போது, என் வசப்பட்ட எனதான வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சில இழப்புகள்
என்னை நிலைகுலைய வைத்தன. அந்தப் பொழுதுகளில் என் துயரங்களின் வடிகால்களாயும்,
என்னால் தாங்க முடியாத, அல்லது நம்ப முடியாத சில விடயங்களைக் கண்டு நான்
வெகுண்டெழுந்த போது என் கோபத்தின் தெறிப்புகளாயும்,

எனது சமூகத்தின் போட்டிகளும், பொறாமைகளும், நான், நீ.. என்ற அகம்பாவங்களும், ஆண், பெண் என்ற பேதங்களும் அதனாலான

ஏற்றத் தாழ்வுகளும் என் கண்களில் பட்ட போதும், என் மேல் படர்ந்த போதும், அவைகளைப்
பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத என் எதிர்ப்புக்களாயும்,
மறுப்புக்களாயும், சுட்டல்களாயும், சமயத்தில், இயலாமையின் சொரிவுகளாயும், வாழ்வின்
ஒவ்வொரு

படியிலுமான சந்தோசத்தின் பொழிவுகளாயும் வெளிப்பட்ட உணர்வுகளின் கோலங்களே இவை.
இவைகள் வெறும் கதைகள் அல்ல. என்னைச் சுற்றியுள்ள எதார்த்தங்கள்.


- மேற்படி நூலினை பெற விரும்புவோர் சந்திரா செல்வகுமாரனுடன்

chandra1200@gmail.com
என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு
கொள்ளலாம். -

*************************************************

தொகுப்பிலிருந்து ஒரு கதை!

சிறுகதை: வேஷங்கள்!

- சந்திரவதனா செல்வகுமாரன் -



சிறுகதை: வேஷங்கள்!காலைப்பொழுதுக்கே
உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி
இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய்
மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில்
காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது
புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு
சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச்
சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.

"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு
குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா,
படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான். அவனது வார்த்தையின் பரிவில்
நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட
கேசங்களைக் கோதிய படி "சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

"நீ அழக் கூடாது."

"சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து "உமா நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

"ஏன்....?" மிகவும் திடுக்கிட்டவளாய்

"ஒவ்வொருநாளும் பயணஞ் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

"இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது..?"

"பார்த்தீரே..! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை. "

" ....... "

சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

"உமா உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி என்ற செக்கொஸ்லாவியப் பொம்பிளை
வேலை செய்யிறது..?"

"ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே......!
பாவம்...... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

"அது வந்து...... உமா..! அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு
என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து.... "

"வந்து...... "

"தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள். "

"அதுக்கு.....! "

"அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம்
துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள்
வெளி வர மறுத்தன.

"யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை
இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு...
இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதிகளும் இருக்குத்தானே. "

"இதெல்லாம் நீங்களாகுமோ..? நீங்கள் அவளை விரும்பிறீங்களோ...?"

"இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான்
இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை. "

"நானும் அம்மா அப்பா சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய
ஜேர்மனியிலை உங்களையும் நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?"
இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

"ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை இதை
அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது...!"

"நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள்.
முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு "பொம்பிளை மாதிரி நடந்து
கொள்ளும்." என்று கத்தினான். அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம்
துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி,
"இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு
மேலை என்னைத் தொட்டீரோ..! நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை
முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது.
நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும்
தெரியத் தேவையில்லை. "

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும்,
வெட்கமாகவும் இருந்தது. "என்னவெல்லாம் இவன் சொல்கிறான்" என்று கலக்கமாகவும்
இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும்
பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை
கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? "இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது
தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா" என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலை ரூர் என்று போய் விட்டாள். திரும்பி வர
இன்னும் எட்டு நாட்களாகும்.


"நீங்கள் சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்...?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

"இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பம்தான். ஆனால் இப்ப
சக்கிக்கு என்ரை உதவி தேவை. "

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. "ஓ....." வென்று குழறினாள்.

"ஏனப்பா இப்படிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது.
என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தர குடும்பங்கள் மாதிரிக்
கத்திறீர்!"

"ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும்
முதலாந்தரமா இருக்கோ..?"

வார்த்தைகள் மிகச் சூடாக அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு,
சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப்
பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள்.
கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள்... காரையும் எடுத்துக் கொண்டு
இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள்.

சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து "தூங்குகிறாயா...?" என்று
சைகை காட்டிச் சினக்க.. சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு..... மீண்டும்
பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதை கடைசி செக்கனில் கண்டு அவசரமாக
பிறேக்கை அழுத்தினாள். "கடவுளே...! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை
அடிபட்டிருந்தால்...?" என்று முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல்
தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி
ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய்
விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல்
மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது.
எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும் அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் சச்சரவுகள்
என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாத
குடும்பங்களா..? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து
பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய
வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு
விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண
விடயம் போல அவள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், இவளை நிலைகுலைத்து
விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான்
நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன்
உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக்
கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக
எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது
மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும்
ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல்
ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி
வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக்
குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப அவள் இரத்தமும் சதையுமாய்
தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை
பொலிஸ்வாகனங்களும் அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும்
வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான
போக்குவரத்துக்களும் மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு யேர்மனிய மாணவி. அடுத்து ஒரு
இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். தேவாலயஉச்சிக்கு இனி யாருமே ஏற
முடியாது என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை
மறித்து கேற் போட்டு பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.



விசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் அள்ளிக் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப்
பட்ட சதைத் துண்டுகள் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன.
சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து
வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.



சந்துரு சோகமாய் தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு
வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டை சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக
மற்றவர்களுக்குக் காட்டினான். அழுவாரைப் போல இருந்து "அவ பாருங்கோ சரியானநல்லவ.
ஆனால் யேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான்
அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு
சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி
பள்ளிக்கூடம் ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான்
அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்....." அலுக்காமல்
சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.



http://www.selvakumaran.de/index2/kathai/vechankal.html



http://manaosai.blogspot.com/



chandra1200@gmail.com

Mittwoch, Januar 09, 2008

Vanni pays homage to Col. Charles

[TamilNet, Sunday, 06 January 2008, 17:08 GMT]


Hundreds of Tamils paid homage Sunday at Puthukkudyrippu in Vanni to the remains of Col. Charles, Head of Liberation Tigers Military Intelligence, killed Saturday evening in a random Claymore attack by Sri Lanka Army Deep Penetration Unit in Pa'l'lamadu in Mannaar, sources in Vanni said. Col. Soosai, Liberation Tigers special commander of the Sea Tigers paid tribute to Col Charles at the event held Sunday around 4:00 p.m in the Heroes Cemetary Hall in Puthukkudiyiruppu, presided by C. Ilamparithi, Puthukkudyiruppu region Political Head of LTTE.

Col.Soosai, during the eulogy said “It is difficult to accept losses but without losses we cannot achieve liberation”

Extracts from his speech follow:

"Col.Charles was known only to a few but the enemy knew his identity.

“When the enemy occupied Jaffna peninsula and was roaming around freely, it was difficult for our cadres to find accommodation and meals. It was during that difficult time Col.Charles functioning under the leadership of Captain Morris who was in charge of Point Pedro area, faced the military offensives of Indian Peace Keeping Forces (IPKF). He was later sent to Ma'nalaa'ru where he coordinated a number of attacks. A short while later he returned to Jaffna peninsula and continued his activities together with LTTE Intelligence Unit Head Poddu Ammaan.

“In 1990 Col.Charles who was in charge of Vadamaraadchii area up to that time of withdrawal of IPKF was identified by Poddu Ammaan, Head of our Intelligence Unit as the ideal candidate to prepare a base in the South to stage attacks from there. Stationing himself in the South Col.Charles staged a series of successful attacks.

“He successfully led a number of daring attacks but once he sensed that he was being wanted by the enemy he quickly changed his place of operation to Batticaloa from where he continued to launch many more successful attacks against the enemy.

"During 2001 Katunayake Air Port attack which was flawlessly executed making sure none of the civilian passengers including foreigners were not hurt, this great hero Charles who led the attack proved to the world how effectively he trained the Black Tigers under the guidance of Poddu Ammaan and also showed to the world community the great power of and discipline of our fighters.

“But for our people he was a faceless commander.

“During early stages of his involvement in our movement, Charles functioned under me. At that time while executing his own responsibilities he created a team of Black Tigers to function incognito for attacks to be staged not only in the North and East but also on certain targets in the South. According to my request, Charles created this incognito Black Sea Tiger Unit for attacks in the South.

“Today, this great hero is not with us. However, the fighters trained by him will carry his dreams and continue the military attacks.

"He was not only an expert in staging military offensives but he also had a talent of freely mixing with each and every one. He developed a very cordial relationship with our national leader.

"He did not restrict his unique type of attacks to the south but making use of the cadres of the newly created Liberation Tigers Military Intelligence (MI) he led attacks in Mukamaalai smashing the Forward Defence lines (FDL).

“It is difficult to accept losses, but without losses we cannot achieve liberation.

“Let us carry forward the dreams of Col.Charles and continue our freedom fight greater vigour," Special Commander of the Sea Tigers said.

The remains of Col. Charles were taken in procession at 12:00 noon from his home in Ki’linochchi in a decorated vehicle to Puthukkudirrippu, and residents along the way offered flowers paying their last respects to Col. Charles.

Col. Pirapa, one of the colonels of LTTE Military Intelligence, lit the Common Flame, while the wife of slain Col. Charles garlanded her husband’s remains.

Col. Soosai, Col. Athavan, Special Commander and the head of the LTTE Military Initial Training Schools, Thamilkumaran, the Head of LTTE Finance Wing, and Dr. Sivapalan garlanded Col. Charles’ remains.

Paranthaman, who had been Col. Charles’ school teacher, spoke at the event highlighting Charles' outstanding qualities as a leader.

LTTE's Head of Military Intelligence killed in Claymore ambush

[TamilNet, Sunday, 06 January 2008, 01:20 GMT]

Col. Charles, Head of Liberation Tigers Military Intelligence, was killed Saturday evening in a random Claymore attack by Sri Lanka Army Deep Penetration Unit in Pa'l'lamadu in Mannaar, LTTE sources in Vanni said. Col. Charles who has been in charge of internal intelligence within the ranks of LTTE ground forces and led an external operations corps as well as a regular combat force that has been deployed in Mannaar district, was killed together with three LTTE lieutenants in the ambush while they were riding in a van between Iluppaikkadavai and Pa'l'lamadu at 3:10 p.m.

Col Charles (Shanmuganathan Ravishankar, Jaffna) was on a mission inspecting his regular forces in Mannaar, informed sources said.

The lieutenants killed in the ambush were identified as Sukanthan (Sivapalan Sreetharan) from Jeyapuram, Lt. Veeramaravan (Pararajasingham Suthan) from Mallaavi and Lt. Kalaa (Sinnaththamby Kangatharan) from Vaddakkachchi.

Col. Charles, who joined the LTTE as a full-time member in December 1985 was taken into its Intelligence Wing following his military performance in Jaffna district and later in Vanni during the LTTE - India war. He served in a key position in LTTE Intelligence Wing between 1991 and 2004, also as the head of LTTE Intelligence in Batticaloa-Ampaa'rai district between 1997 and 2000. He has commanded a number of key military operations, LTTE officials said.

Col. Charles was appointed as the Head of newly established Military Intelligence wing in 2004 by the LTTE leader V. Pirapaharan.


Col. Charles, at the left of Col. Soosai, among a section of senior LTTE commanders. [Library Photo]

பெண் அடங்க வேண்டியவள் அல்ல!

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=166&t=10184

பெண் அடங்க வேண்டியவள் அல்ல!
முருகா செவ் அக் 12, 2004 6:52 am

- சந்திரவதனா செல்வகுமாரன் -

சார்ல்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியாயமோ இல்லையோ, குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியாயமாக உள்ளது. 35 வருடங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டிரக்ஸின் கண்டு பிடிப்புகளின்படி குரங்கும் வரதட்சணை கொடுக்கிறதாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? கற்காலத்தி லிருந்து மனிதன் கணினி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் ஏனோ இதனை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும் சிறுமைப்படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை.

இப்பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.

இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த மனிதர்கள் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின் தங்கியுள்ளார்கள்.

முக்கியமாக சிய மத்திய கிழக்கு நாட்டு ஆண்கள் எப்போதும், பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப்போக வேண்டியவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள்.

அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு, பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள்.

காலங்காலமாக நடைபெற்று வரும் இத்திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள் தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள்.

இரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரி லிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெண்கள் விடயத்தில் ஓர வஞ்சகமாகவே நடந்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக "புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே" என்ற பாடலில் புருஷன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள் என்று எல்லாவற்றையும் விட்டு, புருஷன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள்.

அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அனுசரித்து வாழ் என்று ஏன் கணவன்மார்களுக்கு ஒரு பாட்டு எழுதப்படவில்லை?

ஏன் இந்த வஞ்சனை?

இதே போல் பழகத் தெரிய வேண்டும் பெண்ணே என்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான்.

ஏன் ஓர் ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ?

இன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள் பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமா?

மானே, தேனே, கனியே, கற்கண்டே என்று பெண்களை வர்ணிக்கும் அதே கவியுள்ளங்கள்தான் பெண்களை அடங்கிப் போகும் படியும் கவி புனைந்துள்ளன.

இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிகமிக வருத்தமான விடயம்.

ஆணென்ன? பெண்ணென்ன? எல்லோரும் மனிதப் பிறவிகள்தான். ஏன் இது மறுக்கப்பட்டது? மறைக்கப்பட்டது?

முதலாம் உலகப்போர் வரை ஐரோப்பிய பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள்; வர்த்தக நிறுவனங்கள், போன்றவற்றில் வேலைக்கமர்த்தப்பட்டபோதுதான் தமது வலிமையை அப்பெண்கள் உணர்ந்து விழித்தெழுந்து கோசமிட்டார்களாம். ஏன் இன்று ஆசியப் பெண்களான தமிழீழப் பெண்கள் கூட நற்குணம் என்றும் நற்பண்பு என்றும் வேலிகள் போட்டுப் பெண்ணை வீட்டுக்குள் அடைத்தோர் நாண போர்க் கொடி ஏந்தி - அங்கே நாட்டினைக் காக்கின்றார்கள்.

புகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம். பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம்?
ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரர்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம்.

பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தத்தில் உள்ளது?ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம்.

பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, மடிந்து வெந்து மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே. இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்! ஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாச்சாரம், பண்பாடு, மரபு என்று சில ஆயுதங்களைப் பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே! தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா? ண்களுக்கென்று எதுவுமே இல்லையா? ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் வாழ்கிறார்கள்?

பட்டிமன்றங்களும் ஒட்டு வெட்டுக்களும் கலாச்சாரம், பண்பாடு என்று வந்தால் தாலி, பொட்டு, சேலை இவைகளைத்தான் விவாதத்துக்குரிய பெரிய விடயங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீறினால் பெண்களின் மறுமணம்.

ஆண்களின் மறுமணம் பேசப்படக்கூடிய அதிசயமான விடயமே இல்லை. ஆனால் பெண்களின் மறுமணமோ நடக்கவே கூடாது மரபு மீறிய, கலாச்சாரம் கெட்ட, பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தொனிக்கிறது.

இந்தக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை இது நம் மேல் திணிக்கப்பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே பெண்கள் போற்றிப் பாதுகாப்பது தான் மிக மிக வருத்தமான விடயம்.

இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு நிலையிலும் குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண் - அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன? அடங்குதல், ஒடுங்குதல், ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று தொழுதல், புகுந்த வீட்டில் பணிந்து நடந்து பிறந்த வீட்டுப் பெருமை காத்தல் இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.

நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் சொந்த காலில் நிற்க தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து எது தேவை என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

முக்கியமாக - உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பேதம் பாராட்டாது சமமாக வளருங்கள், நீ பெண் குழந்தை நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உங்கள் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்குமான தகராறின்போது நீங்கள் சொல்வீர்களானால் - அங்கு நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப்படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையின் மனமும்தான்.

ஆண் குழந்தையின் மூளையில் அப்போதே - பெண்கள் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டியவர்கள்தான் என்று பதிந்து விடுகிறது. அதுவே நாளடைவில் அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் தனக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டியவர்கள் என அவனை எண்ண வைக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும் பெண் பிள்ளைகளுக்கு நீ பெண்ணல்லவோ எனப் போதிக்கப்படும் விடயங்கள், கூடவே வளரும் ஆண்பிள்ளையின் மூளையில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமெனப் பதியப்பட்டு விடுகிறது.

ஆகவே பெண்களே! உங்கள் பிள்ளைகளை -ஆண் பெண் பேதம் காட்டாது விட்டுக் கொடுப்பதிலிருந்து சமையல், வீட்டு வேலை, கல்வி, தொழிற்கல்வி, தொழில் மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற்பாடுகளிலும் சமத்துவத்தைப் பேணி வளருங்கள். எந்தக் கட்டத்திலும் உங்கள் பெண் பிள்ளையை நீ பெண் என்று கூறி சமையல் அறைக்கும் ஆண் பிள்ளையை வெளி வேலைக்கும் அனுப்பாதீர்கள். இன்றைய பிள்ளைகளாவது நாளை - இந்த வேலை ணுக்கு இந்த வேலை பெண்ணுக்கு என்று நினைக்காமல் இருக்க ஆண் பிள்ளைகளை சமையல் அறைக்கும் பெண் பிள்ளைகளை வெளி வேலைக்கும் அனுப்புங்கள்.

பெண்களுக்கு நடனமும் பாடலும் தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள், (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள்.

உங்கள் வளர்ப்பில் - பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன் என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.

இதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூற வேண்டும் என நீங்கள் எண்ணலாம். நாங்கள் குனிந்து நின்று கொண்டு ஆண்களைப் பிழை கூற முடியாது.

பெண்கள் தான் நிமிர வேண்டும்.

நாளைய பெண்கள் சுயமாக வாழ நாங்கள் தான் பாதையமைக்க வேண்டும்.

"செம்பருத்தியில் தோழி.சந்திரவதனா"


இக்பால் செவ் நவ 09, 2004 11:18 am
உண்மையான கருத்துகள். பாலா தம்பி, மஞ்சு தங்கை இந்த பதிவுக்கு வரும்பட்சத்தில் இன்னும் கருத்துகள் பல அலசப்பட்டு இருக்கும். வாருங்கள். -அன்புடன் அண்ணா.


முத்தமிழ் செவ் நவ 09, 2004 1:35 pm
நல்ல விரிவான அலசல். நிறைய எழுதி இருக்கிறார் திருமதி.சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள். பெண்களை அடக்க நினைக்கும் ஆண்களுக்கு தமது கண்டனத்தையும், பெண்களுக்கு விழிப்புணர்வையும் கொடுத்த தோழிக்கு நன்றி. பூனைக்கு யார்தான் மணி கட்டுவது என்ற கும்பலில் தனியொரு ஆளாய் வீறுகொண்டு எழுந்த எழுத்தாளர் சந்திரவதனா அவர்கள் தம் படைப்புகளால் மின்னுகிறார்.

E: பெண் அடங்க வேண்டியவள் அல்ல!
bala புத நவ 10, 2004 7:14 am
ம்.. என்னை சும்மா இருக்க விட மாட்டீங்க போலிருக்கு.. சின்னமருது கூட பெரிய போர் ஏற்பட போகுதுன்னு நினைக்கிறேன்... யாரு நம்ம சின்ன மருதுவா எழுதியிருக்காருன்னு பார்த்தா..கடைசியில் மதிப்பிற்குறிய சந்திரவதனா.... பெண்.. பெண்.. ஏன் இந்த கவர்ச்சி வலைக்குள் சிக்கி தவிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சும்மா அரைத்தமாவையே அரைப்பது போல... பழங்காலத்தில் நடந்தவைகளேயே திரும்ப திரும்ப வந்துகொண்டிருக்கிறது.. வலிமை உள்ளவன் வலிமை அற்றவனை அடிமைப்படுத்துவது புதிதல்ல... இது மனித இனம் என்றில்லை.. எல்லா இடத்திலும் பரவி இருக்கும் ஒன்று... கெட்டது நடந்தால் மட்டும் படைப்பையும் விதியையும் நொந்து கொள்ளும் நம் மானிடர்கள் இந்த மாதிரியான செயல்களில் மட்டும் மற்றவர்கள் தாக்கி பேசுவதில் சளைத்தவர்கள் அல்ல. யார் அந்த சந்திரவதனா? இனையத்தில் பெண்ணுரிமை மேசுவதால் மட்டும் இங்கு பெண்ணடிமை நின்று போய்விட போவதில்லை. இத இந்த ரேஞ்சில் போனால் நான் கூட நாளை இனையத்தில் பெண்ணிரிமை எதிர்ப்பு வாதி என்று பட்டம் பெற்றால் கூட ஆச்சர்யபடுவதிற்கில்லை. வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியகூடாது என்று சொல்வார்கள்.. எங்கயோ ஜெர்மனியில் இருந்து கொண்டு பெண்ணுரிமை பேசுவதால் என்ன பயன் வந்து விட போகிறது.? பெண்ணுரிமைக்காக மதிப்பிற்குரிய சந்திரவதனா என்ன என்ன செய்துள்ளார்கள் என்று சொன்னால் என்னைப்போல முட்டாள்களுக்கு புரியும். என்னைப்பொருத்தவரை பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுகொண்டிருக்கிறார்கள் என்றால் அது கிராமப்புறங்களில் தான் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கிராமப்புற பெண்களை எளிதில் சென்றடையும் வகையில் மதிப்பிற்குரிய சந்திரவதான என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். அதற்கு முன்னால் யாரவது ஒருவர் தற்போதைய பென்களின் மனதில் என்னமாதிரியான கற்பனைகள் உள்ளன என்று சொல்லமுடியுமா? இந்த ஒரு விசயத்தில் நான் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. திறமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் முன்னுக்கு வரட்டும். தட்டி பறிப்பதும், தடுத்து நிறுத்துவதும் தவறு அந்த வகையில் திறமை உள்ள பெண்கள் இன்னும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை யாராவது நம்மை ஆங்கிலேயர் அடிமைப்படுத்தியது போல அடிமைப்படுத்தி கொண்டிருக்கிறோமா? நேர்முக எழுத்து தேர்வுக்கு செல்கிறோம்.. அவள் நன்றாக எழுதி பாஸ்பன்னியதும்.. நீ பெண் இந்த வேலைக்கு வரவேண்டாம் என்று யாராவது சொல்கிறார்களா? ஒரு பெண்ணுடைய முன்ணேற்றம் என்பது...அவளும் ஆன்களுக்கு நிகராக வேலைக்கு போய் சம்பாதிக்கிறாள் என்று அர்த்தம் இல்லை...இதோ உதாரனத்திற்கு மார்க்கெட்டிங் வேலை... தெருத்தெருவாக ஊர் ஊராக அலைந்து ஒரு ஆன் மட்டுமே பனியாற்ற முடியும். 24 மனி நேரம் வாடிக்கையாளர் சேவை மையம்... இரவு நேரங்களில் ஆன்கள் ஷிப்ட் பார்ப்பார்களாம் பெண்கள் ஜெனரல் ஷிப்ட் பார்த்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்களாம்.. மெக்கானிக் கடையில் வேலை ச்ய்பவன் லாரிக்கு அடியில் படுத்துகொண்டு கணரக பொருள்களை கழட்டுவதும் மாட்டுவதுமாக இருப்பான்..இது போல எத்தனையோ வேலைகளை சுட்டுகாட்ட முடியும். நம்ம பண்கள் இந்த மாதிரியான வேலைகளில் ஈடு பாடுகாட்டாமல்.. சொகுசான வேலைகளுக்கு மட்டும் ஆர்வம் காட்டுவது....அதாவது.. கனினி முன் உட்கார்ந்து மென்பொருள் பனியாளராக, வரவேற்பறை அலங்கரிப்பவராக, தொலைபேசியில் கொஞ்சும் குரலில் பேசி கிரெடிட் கார்டு, எப் எம் நிகழ்ச்சி, லோன் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை கவர்வது.. இப்படி.. இதற்கெல்லாம் உதாரனம்மாக.. இன்னைக்கு எத்தனையோ லட்சுமிக்கள் இன்று தமிழ்நாட்டை கலக்கி கொண்டிருக்கிறார்கள்..... இப்ப சொல்லுவீங்களே... இது பெண்களின் உடற்கூற்றின் இயலாமை... அதானால் தான் முடியவில்லை என்று.. நானும் ஒத்துகொள்கிறேன்.. இந்த ஏற்றதாழ்வுகளுக்கு படைக்கப்பட்ட விதம் காரனமே அன்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை..

நன்றிபகுத்தறிவு பகலவன்....பாலா


முருகா புத நவ 10, 2004 7:24 am
அருமை அருமை அருமை பாலா. இதுபோன்ற ஒரு விளக்கத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன். தீபாவளிக் களேபரங்களில் அல்லாடிக் கொண்டிருப்பதால் நான் எனது கருத்தினைப் பின்னர் தருகிறேனே.