Mittwoch, Januar 09, 2008

பெண் அடங்க வேண்டியவள் அல்ல!

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=166&t=10184

பெண் அடங்க வேண்டியவள் அல்ல!
முருகா செவ் அக் 12, 2004 6:52 am

- சந்திரவதனா செல்வகுமாரன் -

சார்ல்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியாயமோ இல்லையோ, குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியாயமாக உள்ளது. 35 வருடங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டிரக்ஸின் கண்டு பிடிப்புகளின்படி குரங்கும் வரதட்சணை கொடுக்கிறதாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? கற்காலத்தி லிருந்து மனிதன் கணினி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் ஏனோ இதனை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும் சிறுமைப்படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை.

இப்பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.

இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த மனிதர்கள் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின் தங்கியுள்ளார்கள்.

முக்கியமாக சிய மத்திய கிழக்கு நாட்டு ஆண்கள் எப்போதும், பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப்போக வேண்டியவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள்.

அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு, பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள்.

காலங்காலமாக நடைபெற்று வரும் இத்திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள் தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள்.

இரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரி லிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெண்கள் விடயத்தில் ஓர வஞ்சகமாகவே நடந்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக "புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே" என்ற பாடலில் புருஷன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள் என்று எல்லாவற்றையும் விட்டு, புருஷன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள்.

அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அனுசரித்து வாழ் என்று ஏன் கணவன்மார்களுக்கு ஒரு பாட்டு எழுதப்படவில்லை?

ஏன் இந்த வஞ்சனை?

இதே போல் பழகத் தெரிய வேண்டும் பெண்ணே என்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான்.

ஏன் ஓர் ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ?

இன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள் பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமா?

மானே, தேனே, கனியே, கற்கண்டே என்று பெண்களை வர்ணிக்கும் அதே கவியுள்ளங்கள்தான் பெண்களை அடங்கிப் போகும் படியும் கவி புனைந்துள்ளன.

இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிகமிக வருத்தமான விடயம்.

ஆணென்ன? பெண்ணென்ன? எல்லோரும் மனிதப் பிறவிகள்தான். ஏன் இது மறுக்கப்பட்டது? மறைக்கப்பட்டது?

முதலாம் உலகப்போர் வரை ஐரோப்பிய பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள்; வர்த்தக நிறுவனங்கள், போன்றவற்றில் வேலைக்கமர்த்தப்பட்டபோதுதான் தமது வலிமையை அப்பெண்கள் உணர்ந்து விழித்தெழுந்து கோசமிட்டார்களாம். ஏன் இன்று ஆசியப் பெண்களான தமிழீழப் பெண்கள் கூட நற்குணம் என்றும் நற்பண்பு என்றும் வேலிகள் போட்டுப் பெண்ணை வீட்டுக்குள் அடைத்தோர் நாண போர்க் கொடி ஏந்தி - அங்கே நாட்டினைக் காக்கின்றார்கள்.

புகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம். பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம்?
ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரர்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம்.

பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தத்தில் உள்ளது?ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம்.

பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, மடிந்து வெந்து மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே. இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்! ஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாச்சாரம், பண்பாடு, மரபு என்று சில ஆயுதங்களைப் பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே! தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா? ண்களுக்கென்று எதுவுமே இல்லையா? ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் வாழ்கிறார்கள்?

பட்டிமன்றங்களும் ஒட்டு வெட்டுக்களும் கலாச்சாரம், பண்பாடு என்று வந்தால் தாலி, பொட்டு, சேலை இவைகளைத்தான் விவாதத்துக்குரிய பெரிய விடயங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீறினால் பெண்களின் மறுமணம்.

ஆண்களின் மறுமணம் பேசப்படக்கூடிய அதிசயமான விடயமே இல்லை. ஆனால் பெண்களின் மறுமணமோ நடக்கவே கூடாது மரபு மீறிய, கலாச்சாரம் கெட்ட, பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தொனிக்கிறது.

இந்தக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை இது நம் மேல் திணிக்கப்பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே பெண்கள் போற்றிப் பாதுகாப்பது தான் மிக மிக வருத்தமான விடயம்.

இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு நிலையிலும் குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண் - அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன? அடங்குதல், ஒடுங்குதல், ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று தொழுதல், புகுந்த வீட்டில் பணிந்து நடந்து பிறந்த வீட்டுப் பெருமை காத்தல் இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.

நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் சொந்த காலில் நிற்க தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து எது தேவை என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

முக்கியமாக - உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பேதம் பாராட்டாது சமமாக வளருங்கள், நீ பெண் குழந்தை நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உங்கள் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்குமான தகராறின்போது நீங்கள் சொல்வீர்களானால் - அங்கு நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப்படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையின் மனமும்தான்.

ஆண் குழந்தையின் மூளையில் அப்போதே - பெண்கள் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டியவர்கள்தான் என்று பதிந்து விடுகிறது. அதுவே நாளடைவில் அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் தனக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டியவர்கள் என அவனை எண்ண வைக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும் பெண் பிள்ளைகளுக்கு நீ பெண்ணல்லவோ எனப் போதிக்கப்படும் விடயங்கள், கூடவே வளரும் ஆண்பிள்ளையின் மூளையில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமெனப் பதியப்பட்டு விடுகிறது.

ஆகவே பெண்களே! உங்கள் பிள்ளைகளை -ஆண் பெண் பேதம் காட்டாது விட்டுக் கொடுப்பதிலிருந்து சமையல், வீட்டு வேலை, கல்வி, தொழிற்கல்வி, தொழில் மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற்பாடுகளிலும் சமத்துவத்தைப் பேணி வளருங்கள். எந்தக் கட்டத்திலும் உங்கள் பெண் பிள்ளையை நீ பெண் என்று கூறி சமையல் அறைக்கும் ஆண் பிள்ளையை வெளி வேலைக்கும் அனுப்பாதீர்கள். இன்றைய பிள்ளைகளாவது நாளை - இந்த வேலை ணுக்கு இந்த வேலை பெண்ணுக்கு என்று நினைக்காமல் இருக்க ஆண் பிள்ளைகளை சமையல் அறைக்கும் பெண் பிள்ளைகளை வெளி வேலைக்கும் அனுப்புங்கள்.

பெண்களுக்கு நடனமும் பாடலும் தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள், (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள்.

உங்கள் வளர்ப்பில் - பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன் என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.

இதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூற வேண்டும் என நீங்கள் எண்ணலாம். நாங்கள் குனிந்து நின்று கொண்டு ஆண்களைப் பிழை கூற முடியாது.

பெண்கள் தான் நிமிர வேண்டும்.

நாளைய பெண்கள் சுயமாக வாழ நாங்கள் தான் பாதையமைக்க வேண்டும்.

"செம்பருத்தியில் தோழி.சந்திரவதனா"


இக்பால் செவ் நவ 09, 2004 11:18 am
உண்மையான கருத்துகள். பாலா தம்பி, மஞ்சு தங்கை இந்த பதிவுக்கு வரும்பட்சத்தில் இன்னும் கருத்துகள் பல அலசப்பட்டு இருக்கும். வாருங்கள். -அன்புடன் அண்ணா.


முத்தமிழ் செவ் நவ 09, 2004 1:35 pm
நல்ல விரிவான அலசல். நிறைய எழுதி இருக்கிறார் திருமதி.சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள். பெண்களை அடக்க நினைக்கும் ஆண்களுக்கு தமது கண்டனத்தையும், பெண்களுக்கு விழிப்புணர்வையும் கொடுத்த தோழிக்கு நன்றி. பூனைக்கு யார்தான் மணி கட்டுவது என்ற கும்பலில் தனியொரு ஆளாய் வீறுகொண்டு எழுந்த எழுத்தாளர் சந்திரவதனா அவர்கள் தம் படைப்புகளால் மின்னுகிறார்.

E: பெண் அடங்க வேண்டியவள் அல்ல!
bala புத நவ 10, 2004 7:14 am
ம்.. என்னை சும்மா இருக்க விட மாட்டீங்க போலிருக்கு.. சின்னமருது கூட பெரிய போர் ஏற்பட போகுதுன்னு நினைக்கிறேன்... யாரு நம்ம சின்ன மருதுவா எழுதியிருக்காருன்னு பார்த்தா..கடைசியில் மதிப்பிற்குறிய சந்திரவதனா.... பெண்.. பெண்.. ஏன் இந்த கவர்ச்சி வலைக்குள் சிக்கி தவிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சும்மா அரைத்தமாவையே அரைப்பது போல... பழங்காலத்தில் நடந்தவைகளேயே திரும்ப திரும்ப வந்துகொண்டிருக்கிறது.. வலிமை உள்ளவன் வலிமை அற்றவனை அடிமைப்படுத்துவது புதிதல்ல... இது மனித இனம் என்றில்லை.. எல்லா இடத்திலும் பரவி இருக்கும் ஒன்று... கெட்டது நடந்தால் மட்டும் படைப்பையும் விதியையும் நொந்து கொள்ளும் நம் மானிடர்கள் இந்த மாதிரியான செயல்களில் மட்டும் மற்றவர்கள் தாக்கி பேசுவதில் சளைத்தவர்கள் அல்ல. யார் அந்த சந்திரவதனா? இனையத்தில் பெண்ணுரிமை மேசுவதால் மட்டும் இங்கு பெண்ணடிமை நின்று போய்விட போவதில்லை. இத இந்த ரேஞ்சில் போனால் நான் கூட நாளை இனையத்தில் பெண்ணிரிமை எதிர்ப்பு வாதி என்று பட்டம் பெற்றால் கூட ஆச்சர்யபடுவதிற்கில்லை. வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியகூடாது என்று சொல்வார்கள்.. எங்கயோ ஜெர்மனியில் இருந்து கொண்டு பெண்ணுரிமை பேசுவதால் என்ன பயன் வந்து விட போகிறது.? பெண்ணுரிமைக்காக மதிப்பிற்குரிய சந்திரவதனா என்ன என்ன செய்துள்ளார்கள் என்று சொன்னால் என்னைப்போல முட்டாள்களுக்கு புரியும். என்னைப்பொருத்தவரை பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுகொண்டிருக்கிறார்கள் என்றால் அது கிராமப்புறங்களில் தான் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கிராமப்புற பெண்களை எளிதில் சென்றடையும் வகையில் மதிப்பிற்குரிய சந்திரவதான என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். அதற்கு முன்னால் யாரவது ஒருவர் தற்போதைய பென்களின் மனதில் என்னமாதிரியான கற்பனைகள் உள்ளன என்று சொல்லமுடியுமா? இந்த ஒரு விசயத்தில் நான் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. திறமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் முன்னுக்கு வரட்டும். தட்டி பறிப்பதும், தடுத்து நிறுத்துவதும் தவறு அந்த வகையில் திறமை உள்ள பெண்கள் இன்னும் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை யாராவது நம்மை ஆங்கிலேயர் அடிமைப்படுத்தியது போல அடிமைப்படுத்தி கொண்டிருக்கிறோமா? நேர்முக எழுத்து தேர்வுக்கு செல்கிறோம்.. அவள் நன்றாக எழுதி பாஸ்பன்னியதும்.. நீ பெண் இந்த வேலைக்கு வரவேண்டாம் என்று யாராவது சொல்கிறார்களா? ஒரு பெண்ணுடைய முன்ணேற்றம் என்பது...அவளும் ஆன்களுக்கு நிகராக வேலைக்கு போய் சம்பாதிக்கிறாள் என்று அர்த்தம் இல்லை...இதோ உதாரனத்திற்கு மார்க்கெட்டிங் வேலை... தெருத்தெருவாக ஊர் ஊராக அலைந்து ஒரு ஆன் மட்டுமே பனியாற்ற முடியும். 24 மனி நேரம் வாடிக்கையாளர் சேவை மையம்... இரவு நேரங்களில் ஆன்கள் ஷிப்ட் பார்ப்பார்களாம் பெண்கள் ஜெனரல் ஷிப்ட் பார்த்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்களாம்.. மெக்கானிக் கடையில் வேலை ச்ய்பவன் லாரிக்கு அடியில் படுத்துகொண்டு கணரக பொருள்களை கழட்டுவதும் மாட்டுவதுமாக இருப்பான்..இது போல எத்தனையோ வேலைகளை சுட்டுகாட்ட முடியும். நம்ம பண்கள் இந்த மாதிரியான வேலைகளில் ஈடு பாடுகாட்டாமல்.. சொகுசான வேலைகளுக்கு மட்டும் ஆர்வம் காட்டுவது....அதாவது.. கனினி முன் உட்கார்ந்து மென்பொருள் பனியாளராக, வரவேற்பறை அலங்கரிப்பவராக, தொலைபேசியில் கொஞ்சும் குரலில் பேசி கிரெடிட் கார்டு, எப் எம் நிகழ்ச்சி, லோன் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை கவர்வது.. இப்படி.. இதற்கெல்லாம் உதாரனம்மாக.. இன்னைக்கு எத்தனையோ லட்சுமிக்கள் இன்று தமிழ்நாட்டை கலக்கி கொண்டிருக்கிறார்கள்..... இப்ப சொல்லுவீங்களே... இது பெண்களின் உடற்கூற்றின் இயலாமை... அதானால் தான் முடியவில்லை என்று.. நானும் ஒத்துகொள்கிறேன்.. இந்த ஏற்றதாழ்வுகளுக்கு படைக்கப்பட்ட விதம் காரனமே அன்றி வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை..

நன்றிபகுத்தறிவு பகலவன்....பாலா


முருகா புத நவ 10, 2004 7:24 am
அருமை அருமை அருமை பாலா. இதுபோன்ற ஒரு விளக்கத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன். தீபாவளிக் களேபரங்களில் அல்லாடிக் கொண்டிருப்பதால் நான் எனது கருத்தினைப் பின்னர் தருகிறேனே.

Keine Kommentare: